மடிக்கணிணியில் இருந்து முதல் பதிவு

நம்ம நீண்ட நாள் கனவு இது, இல்லீங்க வெறும் லாப்டாப் மட்டும் தான், ஏற்கனவே நான் வேலை பாக்குற யடத்துல அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு பேச்சு, இவன் வேல பாக்கறான்னா இல்ல ப்ளாக்ஸ் படிக்குறான்னான்னு. இருபத்திநாலு மணிநேரமுமும் இணையம் நம்ம பக்க இருந்துட்டு சோறு தண்ணி வேண்டாம், இந்த லட்சண்த்தில வீட்டுக்கு ஒடிடலாமுன்னு ஒரு யோசன, ஆனா இந்த பாழாப் போன இணையம் திருச்சி மாநகரத்துல எப்படி வேல செய்யுமுன்னு ஒரு கிறக்கம்.
எனக்கு வேல செய்ய தேவையான எல்லா கோப்புகளையும் இறக்குற நேரத்துல இது எழுதிக்கிட்டிருக்கிறேன். விர்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் கொஞ்சம் அசமந்தம். அதான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ரெஜிஸ்ட்ரில கை வைக்காத, பயர்பாக்ஸ் கூடாதுன்னு ஏக கெடுபிடி. புது வீட்டுக்குப் போன எங்கம்மாவுக்கு எல்லா சரியான யடத்துல இருக்கணும், உப்பு, புளி, வகையறாக்கள் கிச்சனல்ல இருந்தா மட்டும் போதாது, அதுக்கான பெட்டியில இருக்கணும். கலையாத படுக்க விரிப்பு, அடுக்குன நீயுஸ் பேப்பர் தேதி ப்ரகாரம், இப்படி கொஞ்சம் பிடிவாதம் உண்டு.
பரம்பர வியாதி போல இது. எனக்கு உண்டு, ஆனா அது நான் பயன்படுத்துற கணணி வரைக்குந்தான். டெஸ்டாப்ல ஒண்ணும் இருக்காது, எல்லாம் க்யூக்பார்லதான். மை மூசிக் , மை டாக்குமெண்ட்ஸ் தனி போல்டர்ஸ். பயர்பாக்ஸ் மற்றும் இதர சில பிள்க்கின்ஸ். எக்லிப்ஸ் ரொம்ப முக்கியம். அடுதாப்புல ரெஜிஸ்ட்ரி. போல்டர ரைட் கிளிக் பண்ணி கமாண்ட் ப்ராம்ட். கமாண்ட் ப்ராம்டல CTRL-D போட்ட p-r-o-g டைப் பண்ணா முழு போல்டர் நேம், தமிழ டைப்பண்ண முரசு எடிட்டர், இப்படி சின்ன அத்தியாவசங்கள் தேவை.
இது இல்லாம இந்த வாரம் எப்படி ஓடுது பாக்கலாம்.
பி.கு: இந்த ஆடி முடிஞ்சாலும் முடிஞ்சுது, நம்ம மக்கள் திண்டிக்கல், மதுர, திருநெல்வேலின்னு கல்யாணத்து கூப்பிடுது. இந்த கணணி புண்ணியவான் நம்ம கையில இருக்கிறதால லீவும் போடாம கள்யாணமும் அட்டென்ட் பண்ண மாதிரி இருக்கு.
