எனக்கு ஹிந்தி தெரியாது, கன்னடத்தில சொல்லு

இந்த கன்னட தேசத்தில் இப்படி ஒரு வசனம் அதுவும் ரெண்டாவது மொறயா?
மொத தடவ ஒரு சிக்னல்கிட்ட. நம்ம மாமாக்கள் டிராபிக்க ஒழுங்கு பண்ண , நம்ம திருவாளர் பொது ஜனம் சகதர்மினியோட வந்து நின்னார் பைக்குல, அதுவும் மஞ்ச கோட்டதாண்டி. மாமா டென்சனாகி கன்னடத்துல கத்த, திருவாளர் “ஹிந்தில சொல்லு, this is india”. மாமா பதிலுக்கு ,” இது கர்நாடகா,கன்னடத்துல தான் சொல்லுவேன், தள்ளி நில்லு”
இரண்டாவது ஒரு ஆட்டோகாரன்கிட்ட பேரம் பேசும் போது.
எப்பவும் போல இன்னிக்கும் ஆட்டோ, அதுவும் எட்டு மணிக்கே. நம்மள போல இன்னும் ரெண்டு ஜீவன் கன்னிங்கம் ரோட்டுக்கு நிக்குது. சரி மூணு பேரும் ஒரு ஆட்டோ புடி. 100 மீ. தாண்டுனா டொம்லூர்,அதுக்கு ஒரு மணி நேரம், அப்படியே தாண்டி எம்.ஜி. ரோடு. கன்னிங்கம் ரோடு வர 15 நிமிஷம். யாருகிட்டையும் சில்லற் இல்ல. நண்பர் நூறு தாள நீட்ட , பாவப்பட்ட ஆட்டோகார ஜீவன் இன்னும் அம்பது கேட்டார். மீட்டர் அம்பதில்லயா சொல்லுதுன்னு நம்ம ஹிந்திகார நண்பர்கள் கத்த , பாவப்பட்ட ஜீவன், “இது பாம்பே இல்ல, கன்னடத்துல பேசு”. என்னோட அரகொர ஹிந்தில எப்படியோ என்பதுக்கு முடிச்சு அலுவலகம் வர 11 மணி.
பாக்கற் பழகுற மக்கள் இந்த தேசத்தில தமிழ் ஆட்கள் மாதிரிதான் இருக்காங்க ,ஆனா தெளிவான PR உண்டு, இல்லனா இந்த கிளைமேட் வைச்சே பெங்களுர வித்திருக்க முடியாது. நாமதான் சின்னதா தப்பு பண்ணிட்டோம்.

// “ஹிந்தில சொல்லு, this is india”. மாமா பதிலுக்கு ,” இது கர்நாடகா,கன்னடத்துல தான் சொல்லுவேன், தள்ளி நில்லு” //
நியாயமான பதில்.
Comment by ஜோ — September 6, 2005 @ 8:38 am
//நம்ம ஹிந்திகார நண்பர்கள் கத்த , பாவப்பட்ட ஜீவன், “இது பாம்பே இல்ல, கன்னடத்துல பேசு”. //
பாம்பேல மராத்தி இல்லையா? இந்தி தானா? ஹி ஹி
Comment by குழலி — September 6, 2005 @ 9:00 am
மராத்தி மட்டுமில்ல, ஹிந்தி, குஜராத்தி எல்லா சேர்ந்த கலவை பாம்பே
Comment by Eswar — September 6, 2005 @ 9:13 am
நானும் பெங்களூரில் வசிக்கின்றவந்தான். நான் வந்து ஆறரை ஆண்டுகள் ஆகின்றன. நான் வந்த புதிதில் கன்னடர்களிடத்தில் இந்தியின் பயன்பாடு நிறைய இருக்கும். அப்பொழுது பெங்களூரில் இந்திக்காரர்கள் மிகவும் குறைவு. கன்னடரும் தமிழருமே நிறைய. அப்பொழுது பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் தெரிந்திருந்தது.
ஆனால் விரைவிலேயே இந்த இந்தி மாயை மாறி ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டது. இப்பொழுதுதான் கன்னட மொழி எழுச்சி என்று ஒன்று வந்திருக்கிறது. கன்னடத்திற்கு இந்த மொழி எழுச்சி மிகவும் புதியது. காவிரி பிரச்சனையை அவர்கள் நீண்ட நாட்களாக வைத்திருந்தாலும் கன்னட மொழிக்கான உரிமையை இப்பொழுதுதான் நினைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். நல்ல மாற்றம். அதுவும் பல மொழி பேசுகின்றவர்களும் இப்பொழுது வருகையில் இது நன்றுதான்.
மேலும் இங்குள்ள வந்தேறிகளிடமும் குற்றமுண்டு. இங்கேயும் இந்தியே பேச வேண்டும் என்று நினைப்பார்கள். தமிழர்களும் தெலுங்கர்களும் அப்படியே. ஆண்டுக்கணக்கில் இருந்து விட்டு எனக்குக் கன்னடம் தெரியவே தெரியாது என்று பெருமை வேறு பேசுவார்கள். அது தவறு என்பது என் கருத்து.
Comment by கோ.இராகவன் — September 6, 2005 @ 1:45 pm
ராகவன் நான் சொல்ல வந்தது இதுதான்.
{ நாமதான் சின்னதா தப்பு பண்ணிட்டோம்.}
Comment by Eswar — September 6, 2005 @ 3:01 pm
//ஆண்டுக்கணக்கில் இருந்து விட்டு எனக்குக் கன்னடம் தெரியவே தெரியாது என்று பெருமை வேறு பேசுவார்கள். அது தவறு என்பது என் கருத்து. //
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ராகவன் அவர்களே!
Comment by ஜோ — September 7, 2005 @ 4:25 am
//ஆண்டுக்கணக்கில் இருந்து விட்டு எனக்குக் கன்னடம் தெரியவே தெரியாது என்று பெருமை வேறு பேசுவார்கள். அது தவறு என்பது என் கருத்து. //
எனக்கு இதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு உண்டு. என்னிடம் சிலத் திறமைகள் உள்ளன (புது மொழிகள் கற்பது அவற்றில் ஒன்றல்ல) , அவை வேற்று மொழி பேசும் ஓரு நகரிலுள்ள நிறுவனத்திற்குத் தேவைப்படுவதால் அது எனக்கு வேலை தருகிறது. பொதுமொழியான அலுவல் மொழி கொண்டு அந்நிறுவனத்திற்கு என்னால் ஊழியம் செய்ய முடியும். ஒரு நாளில் பத்து மணி நேரத்திற்கு மேற்பட்ட அலுவலக நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தை குடும்பத்தினருடன் கழிப்பது, இளைப்பாறல், பொழுதுபோக்கு, திறமைகளை மேம்படுத்தல் (skills upgradation) போன்றச் செயல்களுக்குச் செலவிடுவது என்பது என் தனிமனிதத் தேர்வு. ஓரு நாளில் சில நிமிடங்களே தேவைப்படக்கூடிய ஒரு வேற்றுமொழியை ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயத்தின் பேரில் கற்பது என்ற நிலைக்கு இதுவரை நல்லவேளையாக நான் தள்ளப் படவில்லை. என் மொழியறியாமைக்காக இதுவரை நான் தூக்கிலடப்படவுமில்லை.
Comment by Voice on Wings — September 7, 2005 @ 6:47 am
நான் தற்பெழது சவுதியில் உள்ளேன் ஒரு சிறிய கருத்து
அரபு மொழி எனக்கு தெரியாது என்று நான் சென்னாலும் கட்டாயமாக நான் கற்று ஆகவேன்டும் இல்லா விட்டால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது எனவே இராகவன் அவர்கள் செல்வதில் உன்மை உள்ளது என்று நினைக்கிறென்
Comment by manoj — November 14, 2006 @ 7:44 pm