பேருல என்ன இருக்கு, கண்ணாயிரத்துக்கு ஆயிரம் கண்ணா?

‘அம்மனுக்கு பச்ச புடவதான் இல்ல சிவப்புதான். ரெண்டையும் போடரத தானே ஒப்புக்கிட்டோம். இப்ப என்ன தகராறு. பத்து வருசங் கழிச்சு நடக்கர திருவிழா ,இந்த விஷயத்துக்கெல்லாம் ஏய்யா தகராறு பண்ணிறீங்க.’ இப்படி விஜயகுமார் சொல்வதாக ஒரு படம். பேர் நினைவில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியனை போல் இன்னொரு முத்து.
சொல்ல வந்த விஷயமே வேற. என் பேருக்கு முன்னால் இரண்டு இனிசியல். தாத்தா பெயரையும் அப்பா சேர்த்தே பள்ளி ரிஜிஸ்டரில் பதிவு செய்து விட்டார். தமிழ் புத்தகங்களில் க.ர. என்றும் ஆங்கில புத்தங்களில் k.r. என்றும் அடையாளத்திற்கு எழுதிக்கொள்வேன் ( புத்தகம் தொலயாம இருக்கத்தாங்கா, நானில்ல
). தமிழ் வகுப்புகளில் தமிழுக்கு மட்டும் தான் வேலை. ஜெப்பான் என்றால் திருக்குறள் முழு அதிகாரம் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கையில் ஒப்பிக்க வேண்டும்.
விஷயத்துக்கு வரேன். பேரே இவ்வளவு நீளமா இருக்கு , இதில இனிசியல் வேற ரெண்டா, அப்படின்னு வருத்தப்பட்டதில்ல. அம்மா தம்பி, இல்ல, முழு பேரை வைச்சு கூப்பிடுவாங்க. அப்பா டேய் தான். நண்பர்கள் ஈஸ் பாஸ். யாரு எப்படி கூப்டா என்ன . அததது அவர் இஷ்டம் இல்லையா.
ஹிந்தி இயக்குநர் சஞ்ஜெய் பன்சாலி அம்மாவின் பேரையும் தன் பேரோடு இணைத்துக் கொண்டார். தன் பாசத்தை வெளிக்காட்ட இருக்கலாம். நாளைக்கே என் பிள்ளை உன்னோட இன்சியல்ல எதுக்கு போடனும் , அம்மா இன்சியல் தான் வேணும் ,அப்படின்னனா நான் எதுவும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. இல்லப்பா எனக்கு ரெண்டு பேரோட இன்சியலும் வேணுன்னு என் பொண்ணு சொன்னா , சரிடா செல்லம் உன் இஷ்டம்ன்னு விட்ரலாம்.
என்னோடதுதான் மொதல இல்ல உன்னோடது பின்னால இனிசியலுக்கு இந்த சண்ட மொளச்சா ரண்டு பேரோடது இருக்குட்டும் பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். ஆனா யாரோடது முதல்ல சண்ட வந்தா? யாராவது யாருக்கோ கீழ்படியத்தான் வேணும். பச்ச மேல சிவப்பு இல்ல சிவப்பு மேல பச்ச ஒண்ணும் கீழ ஒண்ணு. இதுதான் இயற்கையில் நியதி.
