இணையமும் அது விட்டு செல்லும் அடையாளமும் - 1

போதும், போதும் எதுக்கும் ஒரு அளவிருக்கு. கூகிளின் தற்போதைய மந்திரம் இதுதான். இனி தாங்கள் பட்டியலிடும் வலைத்தளங்களின் எண்ணிக்கையை முகப்பில் வெளியிட மாட்டார்களாம். அதாவது தேடுயந்திரத்தில் புது தளங்கள் அவ்வளவு எளிதாக சேர்க்கப்பட பட மாட்டாது. போதுமான அளவிற்கு தேடுயந்திரத்தில் தளங்கள் திரட்டப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளார்கள்.
கூகிளின் அனுமுறை ரொம்ப சிம்பிள். தேடும் சொல்லுக்கும்,க்ளிக்கும் தளங்களுக்கும் தகுந்தாற் போல் பக்க குறியை (page rank) எனும் சான்றிதழ் அளிக்கப்படும். அதாவது நீங்கள் தேடிய சொல், உலாவி, இடம் மற்றும் ip முகவரியுடன் நீங்கள் கிளிக்கிய தளங்களும் டேட்டாபேஸில் சேகரிக்கப்படும். சேகரிக்கப்பட்ட தகவல் search algorithm மூலம் கிளிக்கிய தளங்களின் பக்க குறிகள் மாற்றப்படும். கிளிக்கப்பட்ட தளங்களின் பக்கத்தைப் பொறுத்து அந்த தளங்களுக்கு கணம் (weightage) தரப்பட்டும். மாற்றாக இந்த கணங்கள் பக்க குறிகளை நிர்ணயிக்கும் .
எளிதாக சொல்ல வேண்டுமானால், வரன் தேட நீங்கள் வேறு ஊருக்கு செல்கிறீர்கள். பெண்/பையன் பற்றிய ஒரு சில தகவலை வைத்துக்கொண்டு செல்லும் வழியில் தென்படும் நபர்களிடம் விசாரிப்பீர்கள். ஒவ்வொருவரின் கருத்தைப் பொறுத்து ஒரு அனுமானம் உருவாகும்.அதைப் பொறுத்து வரன் தேடும் படலத்தை தொடரவீர்கள் அல்லது நிறுத்துவீர்கள். இது ஒரு வகையான நம்பிக்கை தேடல் ( faith based search).
இணையமே இந்த நம்பிக்கையின் பால்தான் உயிர்க்கிறது என்பது என் எண்ணம். உங்கள் மேல் ஒரு கருத்து மேகம் உருவாக உங்கள் முகவரியே ஒன்றே போதும். இது மடலாடற் குழு, வலைப்பதிவு, வலைத்தளம், பரிந்துரைகள், இஷ்டங்கள் என விரியும். உங்களுக்கு அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கைக் கொண்ட ஒருவர் உங்களுக்கு மின்னஞ்சலோ இடவோ, மடலாடற்குழுவிலோ சேர்க்கவோ முற்படுவர்.இந்த கலந்துரையாடல், கருத்து பரிவர்த்தனைகள் எல்லாம் உங்களுக்கு ஒரு அடையாளத்தை தருகிறது.
அந்த அடையாளம் உங்கள் இணைய பயணத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்யும். இவ்வாறு நீளும் பயணம் தன் சுவடுகளை அங்கங்கே பதித்தே செல்லும் . கசினோவில் my fair lady பார்த்தது, சிவாஜி ஒரு மிகை நடிகர் என்று சக வலைப்பதிவில் கருத்திட்டது, விட்டலாச்சாரியா படங்களின் திரைக்கதையை சிலாகித்தது என உங்கள் பாதரட்ஷங்கள் இங்கே மழை நாளில் சேறு காலகளால் கோலமிட்ட மார்பிள் தரைப் போல் பளீரிடும்.
தொடர்புடைய சுட்டிகள் : http://www.msnbc.msn.com/id/9502610/
தொடரலாம்…

நல்ல தகவல் நன்றிகள் பல
Comment by manoj — November 9, 2006 @ 7:51 pm