
பத்து ரூபாயில் வண்ண வண்ண உடைகளில் வகை வகையாய் சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள், அரட்டை அரங்கிகளின் அப்பளம், அடுத்த வீடு, அவ்வளவு தான், உன் மூக்கின் மணமென்ன கேள்வி - பதில் பகுதி, ஆண்கள் பள்ளியில் அகப்பட்ட (more…)

பத்து ரூபாயில் வண்ண வண்ண உடைகளில் வகை வகையாய் சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள், அரட்டை அரங்கிகளின் அப்பளம், அடுத்த வீடு, அவ்வளவு தான், உன் மூக்கின் மணமென்ன கேள்வி - பதில் பகுதி, ஆண்கள் பள்ளியில் அகப்பட்ட (more…)
நீர் வரத்து குறைந்திருந்தாலும் சிறுவர்களின் குதூகலத்துக்கு குறைவில்லாமல் , சிறு சிறு மணல் மேடுகளுக்கு நடுவில் காவிரி. இதை ரசிக்க கரண்ட் இல்லாத ஒரு ஞாயிறுக்கிழமையும் அது இல்லாமல் இயங்காத தொலைக்காட்சியும் தேவையாயிருந்தது. அப்படியே நகரத்தையும் சற்று பார்க்கலாமென்ற ஆசை சற்று நியாமாக பட்டதால் வீர்ரென்றேன். எங்கெங்கும் பார்கினும் போஸ்டர்கள், புதிதாக துவங்கப்பட்ட கட்சிக்கு பத்தாம் ஆண்டு துவக்க விழா, சிலரை வானளவு புகழ்ந்தோ , சிலரை நன்றாக வஞ்சியோ சுவரெங்கும் கருப்பு வெள்ளைகளில் அர்த்த மில்லாத கிறுக்கல்கள். முடிக்கப்பட்ட பாலம் ஒன்று, முடிஞ்சுடும் முடிஞ்சுடும் என்று இழுவைப் பாலம் இன்னொன்று. (more…)

நேராகவோ வளைந்தோ
கிறுக்கும் நெடுக்கமாக
நீண்டபடி
அடைத்தும் அணைத்தும்
குட்டையும் நெட்டையுமாக
கழிந்த நிமிஷங்களை எண்ணிக்கொண்டும்
கடக்க வேண்டிய எண்ணிக்கைகளில்
அவரச அவஸ்தையாய் அரட்டையடித்த படி
பாலரும் பண்டிதரும்
பெண்களும் பெரிசுகளும்
சீராய் நிற்க
வரிசைகள் பலவிதம்

வலது திருப்பங்கள் யூ-டர்ன் ஆவதும்
வராமல் வந்தும் நகராமல் ஊர்ந்திடும் பேருந்துகளும்
புற்றீசலாய் சாலை முற்றும் சான்ரோட்களும்
புதிதாய் வந்திறங்கிய ஹோண்டா கார்ன்னும்
நடைப்பாதையின் ஓரம் தனக்காய் எண்ணும் பல்சரும்
புதிதாய் சுவாசிக்க ஒன்றுமில்லை மாநகரத்தில்
அடுத்ததா சிலப்பதிகாரமா மணிமேகலையான்னு யோசிச்சு மாசம் ஒண்ணாச்சு. நாமெல்லாம் எழுதவே ஆரம்பிச்சிருக்க வேணாமோ? பெருந்தலைகளோட படைப்புகள் படிக்க படிக்க பேனா ஸாரி கணிணி பக்கம் வரதான்னு மனசு குறுகுறுக்குது. படைப்புலகில் வார்த்தைகளை வடிக்கும் விதமும், காட்சிகளை விவரிக்கும் பாங்கும் இருக்க எவ்வாறு வேண்டுமென்பதை ஒவ்வொரு வரிகளிலும் தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள். புதுப்புது உலகத்தை ஒவ்வொரு படைப்பிலும் வரைந்து விட்டு செல்கிறார்கள். (more…)