mammotty

டுத்ததா சிலப்பதிகாரமா மணிமேகலையான்னு யோசிச்சு மாசம் ஒண்ணாச்சு. நாமெல்லாம் எழுதவே ஆரம்பிச்சிருக்க வேணாமோ? பெருந்தலைகளோட படைப்புகள் படிக்க படிக்க பேனா ஸாரி கணிணி பக்கம் வரதான்னு மனசு குறுகுறுக்குது. படைப்புலகில் வார்த்தைகளை வடிக்கும் விதமும், காட்சிகளை விவரிக்கும் பாங்கும் இருக்க எவ்வாறு வேண்டுமென்பதை ஒவ்வொரு வரிகளிலும் தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள். புதுப்புது உலகத்தை ஒவ்வொரு படைப்பிலும் வரைந்து விட்டு செல்கிறார்கள்.

ஒருத்தர் சொல்றார்,’என் எழுத்து அனிச்சை செயலுன்னு,அதை விமர்சிக்காதீர்கள்‘. இன்னொருத்தர் ‘என்னை திருப்திபடுத்தவே எழுத்துகிறேன்‘ என்கிறார். யாரும் நான் இதற்காகத்தான் எழுத வந்தேன் என்று சொல்லவில்லை சிலரைத் தவிர. எழுத்தை தொழிலாக கொள்வது என்றுமே சிரமம்தான் போல. எழுத்தை ஆதர்ஷமாக்கி கொள்ள பலர் தயங்குவது தெரிகிறது. மற்றபடி இவர்கள் படைப்புகள் படித்த வரை என்னோட எழுத்தை கொஞ்சம் கவனமாக எடிட் செய்ய கட்டாயபடுத்தபடுகிறேன். வார்த்தைய கொட்டிடா அள்ள முடியாது பாருங்க.

ஆப்பிரிக்காவிலோ, அன்டார்டிக்காவிலோ யாரோ ஒரு ஜீவன் என்னோட வலைப்பதிவு வேகமா வலையிறங்கிறது என்பதால அவருடைய உலகத்தை சுருக்க கூடாது.தொடர்ந்து எழுதணும். அவரைப் போன்ற வாசகர் நெஞ்சங்களுக்காக இந்த பதிவு. கொசுறா சினிமா செய்தியையும் உண்டு. அதையும் படிச்சுடுங்க.

சேதுராமைய்யர் சி.பி.ஜ. மம்முட்டியின் நாலாவது படம் இதே கதாபாத்திரத்தில், அதே டெம்லேட்டில். ஒரு இளம் காதல் ஜோடி, ஒரு பெரிய தரவாடு, அங்கு நடக்கும் இரு கொலைகள் (ஒண்ணோட நிறுத்திட கூடாது, அப்புறம் சுவரஸ்யம் குறைஞ்சுரும் பாருங்க). சந்தேகிக்கும் படி இரண்டொரு ஆரவாரமான ஆண்கள், அப்பிரானியா சந்தேகித்தாபடிக்கு சில பெண்கள் வயதில் நாற்பதுக்கு மேல் மற்றும் முப்பதுக்கு கீழ். வழக்கம் போல் தமிழ் கூறும் நல்லுலகின் அப்பிரானி வேலைகாரன் அடியோ திட்டோ வாங்குவதற்கு.

பரவாயில்ல பாட்டே போடாம படத்த ஓட்டிட்டாங்க, கஜினியிலும் இத செய்திருக்கலாம், ஒவ்வொரு பதினெஞ்சு நிமிஷத்துக்கு ஒரு கிளைமாக்ஸ் வீதம். என்னதான் லாஜிக் பாக்க கூடாதுன்னாலும். சூர்யா கீளின் சிலேட் ஆன பிறகு சடாரென பழைய நிலைக்கு திரும்புவது திரைக்கதை லாஜிக் பள்ளத்தாக்கில் பொத்தக்கடீரென விழுகிறது. நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் அந்நிய தூக்கத்துலதான் இருக்கார் போல. எழுந்திருங்க ஸார்.

சேதுராமைய்யர் தீம் மியூசிக் தவிர எல்லாம் கசினோ, கெயிட்டி கணக்காயிருக்கு. கோடம்பாக்கத்துல யாரவது நம்ம மம்முட்டிக்கு வருஷத்துக்கு பத்து தமிழ் படம் கொடுத்தா தேவல. அண்ணா நகருக்கும் கோடம்பாக்கத்தும் நெறய தூரமில்லை, ஒரு டாக்சி புடிச்சா அம்ஜிகரை, மேத்தா நகர், சூளைமேடு வழியா சுலமா வந்துறலாம்.

பாரமுல Memento வி.சி.டி. கிடைக்குதான்னு பாக்கனும். தலையைல யாரவது ஓங்கி அடிக்காம இருந்தா சரி. பி.பி.ஸி. தலைல யாரவது ஙெங் ஙெங்ன்னு அடிச்சிருக்கனும் போல. கிறுக்கு புடிச்சு எழுந்தவனாட்டம் இப்படியொரு செய்தி அல்லது துணுக்கு.