
என்னதான் மூன்று வருடத்திற்கு மேல் புழங்கிய ஊராக இருந்தாலும் அன்னியமாக பட்டது சென்னை. 14 மணி நேரம் பயண களைப்பு கத்தி பாறை சிக்னலில் மறைந்தது. நேரு மாமாவும் மறைந்திருந்தார் ஒரு பாலத்திற்காக. ஊர் சுற்ற ஏதுவாக மவுண்ட ரோடு செல்லும் பஸ் ஒன்றில் தொத்திக்கொண்டேன். மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை என்பதில் உள்ளுக்குள்ளே குரூர மகிழ்ச்சி. மறந்த பஸ் நம்பர்கள் சட்டென நினைவுக்கு வந்தன. ரொம்பவும் படுத்தியது D70. (more…)
கடந்த முறை கோப்பையைத் தட்டிச் சென்ற கேரளா இந்த ஆண்டு கொச்சி,திருவனந்தபுரம், கோழிகோட்டிலும் நடத்துகிறது. இப்போட்டிகளை ஜி.டி.வி. ஒளிபரப்புவது இன்னொரு சிறப்பு அம்சம். லீக் ஆட்டங்கள் முடிந்தவடைந்து விட்டன. இனி கால் இறுதி லீக் முறையிலும், அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நாக் அவுட் முறையிலும் நடைபெறும். இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்போட்டியை ஸ்பான்ஸர் செய்ய இசைந்துள்ளது. For fixtures click here.
‘!’வும் கிடைக்கும் ‘?’வும் கிடைக்கும்

எதாவது எழுதணும்
நேரமிருக்கு நிதானமிருக்கு
எதாவது கிறுக்கணும்
விஷயமிருக்கு வில்லங்கம் இருக்கு
எதாவது சொல்லணும்
களமும் இருக்கு கருத்தும் இருக்கு
எதாவது பதியணும்
‘ம்’மும் உண்டு ‘ம்.ஹும்’ உண்டு
என்னடா ‘long time no see’ யாரும் சொல்லிர கூடாதுங்கிறதுக்காக இந்த பதிவு. தலைவருக்கு நிலம சரியில்லை. மத்தளதுக்கு இரண்டு பக்க இடிங்கிறது மாதிரி ஆளாகுக்கு குத்து விட புஷ் இப்ப தன்னோட பாதையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். (more…)
