என்னடா ‘long time no see’ யாரும் சொல்லிர கூடாதுங்கிறதுக்காக இந்த பதிவு. தலைவருக்கு நிலம சரியில்லை. மத்தளதுக்கு இரண்டு பக்க இடிங்கிறது மாதிரி ஆளாகுக்கு குத்து விட புஷ் இப்ப தன்னோட பாதையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த வார டைம் பத்திரிக்கையில் விளக்கமாக அலசியிருக்கிறார்கள். மேலும் குசும்பன் மற்றும் ஸ்ரீகாந்த் பதிவுகள்.

தங்களைத்தான் தேடுகிறார்கள் என்று தவறாக எண்ணி ஓடிய இரண்டு நார்த் ஆப்பிரிக்கா வந்தேறிகள் டிரான்ஸ்பாமரில் அடிபட்டு இறக்க அதுதான் ரிஷிமூலம். அக்டோபர் 27ல் ஆரம்பித்த இந்த கலவரம் இன்னும் அடங்கிய பாடில்லை. மேலும் தகவலுக்கு ஹாரால்ட் டிரிபுனின் மற்றும் இதர சுட்டிகள்.