
என்னதான் மூன்று வருடத்திற்கு மேல் புழங்கிய ஊராக இருந்தாலும் அன்னியமாக பட்டது சென்னை. 14 மணி நேரம் பயண களைப்பு கத்தி பாறை சிக்னலில் மறைந்தது. நேரு மாமாவும் மறைந்திருந்தார் ஒரு பாலத்திற்காக. ஊர் சுற்ற ஏதுவாக மவுண்ட ரோடு செல்லும் பஸ் ஒன்றில் தொத்திக்கொண்டேன். மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை என்பதில் உள்ளுக்குள்ளே குரூர மகிழ்ச்சி. மறந்த பஸ் நம்பர்கள் சட்டென நினைவுக்கு வந்தன. ரொம்பவும் படுத்தியது D70. கடந்த ஆறு மாதமாக முட்டி முட்டி ஞாபக படுத்த முயன்றேன்.
தட்பவெப்பம் பெங்களுருக்கு இணையாக நன்றாகவே இருந்தது. அலட்டி கொள்ளாமல் ஜெர்கினுடன் திரிந்தேன். மதியம் நண்பர்களின் அழைப்பின் பேரில் ஒரு செட்டிநாடு ஹோட்டலில் பிரியாணி. கூட்டம் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றது, நமக்குதான் முடியல. இதுக்கும் பாட்டு வாங்கிக் கொண்டேன். பெங்களுர் போனதும் உனக்கு கொம்பு முளைசிருச்சி மச்சி என்று ஏசினார்கள்.
‘இந்த ரும்லயா இருக்க?’, என்று நண்பரிடம் நான் தங்கிய அறையை ஏளனப்படுத்திய போது, சென்னை விட்டு நான் விலகியது தூரம் முழுமையாக விளங்கியது. என் கற்பனை உலகில் சென்னையை சற்று ரேட்டிங்கை சற்று கீழே இறக்கினேன்.
“சரி அடுத்து என்னடா? கல்யாணமா? savings உண்டா? வீடு வாங்கேன். invest in properties மச்சி”.
“சரி நீதான் சொல்லேன். suggest me dear”
“துரைசாமி ரோட்டுல என் பிரண்ட் ஒருத்தன் 3 பெட் ரூம் பிளாட் வாங்கியிருக்கான். 21 lakhs”
“!$!%^”
என் கற்பனை உலகில் சென்னையின் கொம்பை உயர்த்தினேன் அது மிகவும் கஷ்டமில்லை என்பதாலும் அது அடிக்கடி பழகப்பட்ட விஷயாமாகி விட்டதாலும்.
டெக்கான் ஹாரால்ட் பத்தி விசாரிக்கையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்று அறிந்தேன். ஒரு ரூபாய்க்கு solid என்றார்கள் நண்பர்கள்.சான்றாக ஷக்கிராவின் போட்டோவை காட்டினார் ஏவாள் போட்ட டிரஸ்சுடன்.
“சுனாமியே வந்தாலும் இந்த பீச்சுல கூட்டம் கொறயல பாத்தியா?”
“ஏன்டா தெனம் தெனம் புட்போர்டு அடிச்சு சாகத்தான் செயுறாங்க மக்கள், அதுக்காக புட்போர்டு அடிக்கறதான் நிக்குதா? பஸ்சுல கூட்டந்தான் கொறயுதா?”
விட்ட கொறயா புத்தகங்கள் , லக்கேஜ் சில விட்டுருந்தேன். அதை லபக்கிக் கொண்டு பெங்களுர் திரும்ப தயாரானேன். எப்படியோ சென்னை வர வேண்டுமென்கிற திட்டம் நிறைவேறியது குறித்து மகிழ்ச்சியடைந்தேன். திருப்தியில்லாத இந்த ஒரு நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மறுபடியும் சென்னை வரவேண்டும், அதுவும் இரண்டு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, என்று முடிவு செய்து கொண்டேன்.

நிஜமாவா துரைசாமி ரோடுலே 21 லகரத்துக்கு வீடு? உங்க நண்பரோட விலாசம் வேணுமே ப்ளீஸ்.
Comment by துளசி கோபால் — November 30, 2005 @ 12:31 am
உண்மை தாங்க , ஆனா இது இரண்டு வருடங்களுக்கு முன்பு. see this link
Comment by Eswar — November 30, 2005 @ 5:35 am