
மேலே கூறிய சொற்களை கூகிளியதால் இரண்டு சுட்டி கிடைத்தது. ஒன்று ஹிந்து நாளிதழில் இந்த ரெஸ்டாரென்டைப் பற்றிய அறிமுகம் , இன்னொன்று அனிதா போராவின் அங்கலாப்பு. இதப்போய் ஏன் தேடினாய் அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு விளங்குது, ஆனா பாருங்க பசின்னா நமக்கு , பக்கத்துல எதாவது கவர்ச்சியா போட்டுருந்தா உள்ள நுழைஞ்சுடுவேன். ஆனா ஆபிஸ விட்டு பத்தடி நடந்தோன்னதான் ஞாபகம் வருது பணமில்லன்னு. பணமில்லாட்டி என்ன கடன் அட்டை இருக்கேங்கிற தகிரியத்தில உள்ள போனேன். நம்ம வெயிடர் புண்ணியவான்கள் எல்லாம் டெக்ஸன் பாணில இடது பக்கம் ஒரு பர்ஸ மாதிரி ஒண்ணு பெல்ட் போட்டு இடுப்போட கட்டியிருந்தாங்க. மக்கா ஏதோ விவகாரமா இருக்கேன்னு பாக்க சொல்ல மேதகு வெயிடர் மெனு கார்டு நீட்டினார். பளிரென்று தெரிந்தது பக்கார்டி, ரொமனாவ், மற்றும் இன்னபிற சோம பானங்கள். இது வேணாமேன்னு கூச்சப்பட்டு ஒரே ஒரு ஸ்மால் என்றேன். அப்பறம் நடந்ததுதான் உச்சகட்டம்.
Can you explain this hot mexican chicken ? Don’t you provide bread/rice with this, i dont see them in the menu”
“Yes, we provide bread , rice with some vegetable”
“Will that be too small?”
“No sir. let me bring you sizzler”
“Fine”
ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சூடா வுட்டன் பிளேட் மேலே இரும்பு பாத்திரத்தில வந்தது Hot mexican chicken. சாப்பிட வசதியா ஒரு கத்தி வேற [ yes a real one]. சரி யறங்கு ராசா. கொஞ்சூண்டு சிக்கன் வெற்றிகரமா வெட்டி தொட்டுக்க சாதத்தை தேடினேன். ஒரே கறிஞ்ச மணம். ஏனென்று வினவியதில் இதுதான் sizzlerராம். கடனாய் சாப்பிட்டதற்கு தண்டம் 391+ 10.
வீரலெட்சுமிக்கு போனா கூட்டு பொறியல், மல்லி துவையல், பருப்பு, சாம்பார், ரசம், தயிர்ன்னு புல் மீல்ஸ். எல்லாம் 22க்கு. இனி வீரலெட்சுமியே துணை.

ஹாஹாஹாஹா…. !!! அதானே.. என்னதான் அவிக டகால்டி வேல காட்டுனாலும், நம்ம ஊருச்சாப்பாடு மாதிரி வருமா என்ன..
-
செந்தில்/Senthil
Comment by யாத்திரீகன் — December 15, 2005 @ 3:05 pm
சிஸ்லர் சத்தம் போடுமே… போட்டுச்சா
Comment by பாலா சுப்ரா — December 16, 2005 @ 3:07 am
ஆமா பாலா உஷ்ன்னு ஒரு சத்தம். முடிக்கிற வர வந்துகிட்டே இருந்துச்சு. மொத்தத்துல ஆபீஸ் டீரிட்டுக்கு ஒரு நல்ல இடம். வரேன் சாரே வரேன்
Comment by Eswar — December 16, 2005 @ 4:56 am