சக வேலையாளிடம் என்ன நைட்டு ஊருக்கான்னு கேட்டப்ப இன்னிக்கு திங்களுன்னு படல. இப்பவே வாரயிறுதி வந்துட்டதாக ஒரு பிரமை. நம்ம சகா HPல வேல செய்யுறான். அவனுக்கு இந்த வாரம் முழுசும் லீவு. இது HPயில வருஷா வருஷம் நடக்கும் விடுமுறை திருவிழா. நமக்குதான் கொடுத்து வக்கலே. ஹும் இருந்தாலும் வெட்டி முறிக்க எதுவும் இல்லாததால கடந்த வருஷத்த திருப்பி பாக்கறது நல்லதுன்னு தோனுது.
ராஜ்தீப் சர்தேசாய்க்கு ஜ.பி.என், நமக்கு சமையல். சப்பாத்தி மாவு பிசைவது, சுடுதண்ணி வைப்பது, டீ தயாரிப்பது ( சக்கர எப்பவும் கம்மியாத்தான் போடுவேன் , இதக் கூட ஒழுந்கா செய்யத்தெரியலான்னு கேட்டற கூடாதில்லையா? ) , மற்றும் சாப்பிட்டு விட்டு குறை சொல்வதுஇப்படியாக அம்மாவுக்கு ஒத்தாசை என்ற பெயரில் சமைக்காமல் சலித்துக் கொண்டதை இப்போது தொடர எண்ணம்.
நூடுல்ஸ் நன்றாக செய்ய வருகிறது. ஏற்கனவே சுடுதண்ணி கொதித்து வைத்து பழகியிருந்ததால் மட்டும் முயற்சி செய்யவும். சாம்பாருக்கு பருப்பு ஒன்னு விட்ட சித்தப்பா மாதிரி தெரிந்தாலும் சேர (வேக) மறுக்கிறது. உருளைக் கிழங்கு ஆபத்பாண்டவன், வெங்காயமும் தான். தேங்காய் கொஞ்சம் காஸ்டிலி. மிக்ஸிக்குதான் கட்டி வைக்கணும்ணு அடம். தயிர் பிரச்சனையில்ல, உறைக்கு வைச்சா போதும். அப்புறம் ஊறுகாய் அதுவும் மாங்காய்+பூண்டு excellent combo. தோசைக்கு கல்லா கல்லுக்கு தோசையா? விவாதம் அடுத்த ஆண்டும் தொடரும்.
Coming to books, வாங்கப்பட்ட ஏழெட்டு புத்தகங்களில் அ.முத்துலிங்கம் கதைகள் , காகித மலர்கள், Sri Lanka : Voices from a War மட்டுமே வாசிக்கப்பட்டது. வாசிப்பிற்கும் அனுபவத்திற்கும் இடையில் மாட்டிக் கொள்வது
நேரமும் பொறுமையும் தான். இதைப் பற்றியே ஒரு தனிப் பதிவிடலாம்.
உருப்படியான விஷயங்கள் சில நண்பர்கள் கிடைத்ததுதான். முகம் பார்க்காமல், தோள் குலுக்காமல் நிதானமாக எச்சில் சிகரெட்டிலும், மிஸ்சுடு காலிலும் நசுங்காத நட்பு. வெட்டி அரட்டைக்கும், வெறும் நடைக்கும் அலைந்த கால்கள், இப்போது கல்யாணத்திற்கும் நகர மறுப்பது காரணம் காலம் தான் நண்பர்களே (கொஞ்சூண்டு நானும் ). உருப்போட்ட (உருப்படாத) விஷயங்கள் பிரஞ்ச், சமஸ்கிருத முயற்சிகள்.
அன்பர்களுக்கு விடுமுறைக் கால வாழுத்துக்கள்

பழையன கழிதலும் புதியன் புகுதலும்
அடுத்த வருடம் வருவதற்கு இன்னும் முன்னூறு சொச்ச நாட்கள் இருந்தாலும் , புது வருட தீர்மானமாக ஏத…
Trackback by அனுபல்லவி — January 13, 2009 @ 6:50 am