பொது, பினாத்தல், TamilMay 25, 2006 7:14 pm

மாசாமாசம் நான் படியேறும் இசைக்கோயில். இளையராஜாவின் பாந்தமான முகமும், மைக்கேல் ஜாக்ஸ்சனின் கத்திரி முடியும் ஒருங்கே காட்சிச்தரும் உற்சவத் தேரோட்டம்.

இது என்ன பாட்டு ஜிக்கு புக்கு ரெயிலு ஒண்ணுமே புரியல, இங்கிலீஷ் பாட்டு மாரி இருக்கு.

இது மைக்கேல் ஜாக்ஸ்சன் சரி , அது யார் ஜானட்?

எவ்வளவு தடவ சொல்றது கடைசிலே இங்கிலீஷ் போடாதீங்க, கேப் இருந்தா பரவால்ல.

எத்தன கேஸட் போட்டாலும் தீராது ,மொட்ட மொட்டதான்.

பாக்கெட் மணி இல்லாட்டாலும் ரெக்கார்டு புக் வாங்கணும்ன்னு சொல்லிட்டு ஒரு 60க்கோ ஒரு 90க்கோ பாட்டு லிஸ்ட் எழுதி கொடுத்துட்டு வருவோம். டிரிபிள் கொஞ்சம் போதும் , பேஸ் அதிமாக வேணும் இப்படி ஏகப்பட்ட அறிவுரைகள் காதில் வாங்கப்படாது என்று தெரிந்தும் கொட்டி விட்டு வருவோம்.

பதிவாயிட்டு வரும் வரையில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள். 23 ஜீலை திபாவளி பட ரிலீஸ் போல பரப்பரப்பு பற்றிக் கொள்ளும். கேஸட் கவர் புதுப் பொண்டாட்டி போல் அள்ளி கொள்வோம். எழுத்து கூட்டி படிக்காத குறையாக, எந்த கேஸட் கம்பெனி என்பது வரை ஆராய்வோம்.

ரிலீஸ் தேதி அன்று வீடே களேபரபடும். பட்டியலின் படி வரிசையாக பதிவாகவில்லை என்றால் அதுக்கும் அன்றே ஒரு நடை.

நான் சொன்னது மூணாவது பாட்டு, இதில நாலாவது பேத்தாஸ் ஸாங் ரெக்கார்டாகி இருக்கு. இப்பவே மாத்தி கொடுங்க.

உங்க அதிர்ஷ்டத்தைப் பொருத்து அன்று யேசுதாஸின் ரசிகர் வராமல் இருந்தால், அப்பா (கடை ஒனர்) பிஸியாக இல்லாமல் இருந்தால், உங்கள் கேஸட் புதியதாக இருந்தால்.

தொடரும் ..

பொது, பினாத்தல், TamilMay 23, 2006 6:45 pm

உனக்கென பிறந்தது உனக்கேதான்
கிடைச்சத வைச்சுக்கோ அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் - உண்மை
விடியும் பார் விடியும் பார்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

நீ விரும்பற பொண்ண விட உன்ன விரும்பற பொண்ண காதலி. வாழ்க்கை நல்லாயிருக்கும்.

காதல் என்பது எது வரை கல்யாணம் காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை கழுத்தினில் தாலி விழும் வரை

பொது, பினாத்தல், TamilMay 22, 2006 6:22 pm

Where were you?
நிஜமாகவே மறந்து போய்டுமோன்னு பயமா இருக்கு. பழைய பதிவுகளை பாத்ததுக்கப்புறம் ஒரு தெம்பு. அட நாம கிறுக்கனாதா இதுன்னு ஒரு கிளுகிளுப்பு. இந்த சாக்குல ஒரு பதிவு ரெடி.

தொடர்ந்து எழுதாததற்கு காரணம் கம்பெனி மாறுனது தான். என்னோட தமிழ் தரவுகள் எல்லாம் காலி. முரசு ப்ள்க்கின் நோட்பேடில் ஏனோ வேலை செய்ய மறுக்கிறது. சுரதா கொஞ்ஞூண்டு படுத்தியது.

இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாத்தித்யனுக்காக இந்த புது டூல். புது தட்டச்சு முறை என்றாலும் ஆர்வமிருப்பதால் முயற்சிகளை தொடர்வேன். சித்திரமும் கைப்பழக்கம், எந்தமிழும் பளாக் பக்கம்.