சினிமாNovember 27, 2006 7:40 am

இந்த பாடலுக்கு மூன்றாவது சரணம் இருந்தால். இதோ என் கற்பனை முழுப்பாடலுடன்.

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமேனடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிபோன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

விழித்திரையில் தெரிவதெல்லாம் வெள்ளை மேகமே
வழிதோறும் தேடுகின்றேன் உயிரின் முகமே
கவிதைகளில் வாழ்த்தி நின்றேன் உன்னை மட்டுமே
கானல் நீராய் கரைந்து போனேன் உன்னில் மட்டுமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

சினிமா 7:36 am

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையே

பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை

விழியில் விழும் தூசி தன்னை அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் அன்பே

பாடல் : கவிஞர் வாலி
இசை : ரகுமான்
படம் : சில்லுன்னு ஒரு காதல்