பழையன கழிதலும் புதியன் புகுதலும்
அடுத்த வருடம் வருவதற்கு இன்னும் முன்னூறு சொச்ச நாட்கள் இருந்தாலும் , புது வருட தீர்மானமாக ஏதாவது எழுதியாகணும்.
நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் விதமாக சந்தோஷங்களும் துக்கங்களும் நிரம்பிய வருடம்.
நான் அப்பாவானதும் , அதற்கு சிறிதும் பிரயதனபடாமல் ,மனைவியை வேதனைக்குள்ளாக்கி ,என்னால் குடுக்க முடிந்த அருகாமை என்ற ஓன்றுக்காக மட்டும் திருச்சிக்கும் பெங்களுருக்கும் அலைந்தது புதிது. நிதானத்தை இழந்து தவறிழைத்து பின்பு வருத்தப்பட்டது எல்லாமே ஓரு நாடக டிவிஸ்ட் தான்.
பெயர் வைக்க எல்லாரிடமும் போராடுவேன் என்று எண்ணியதும் பொய்த்து விட்டது.ஒழுங்கு என்ற வார்த்தை தினசரி நடவடிக்கையில் ஒன்றானது. பெருத்த ஏமாற்றம் வந்தாலும் மீண்டு வந்தது புத்துணர்ச்சி அளிக்கிறது.
ஷங்கர் எந்திரனுக்காக மூன்று தயாரிப்பாளர் மாறினார். சூப்பர் ஸ்டார் ‘கடமையை செய், பலனை எதிர்பார்’ என்றார். முருகதாஸ் பாலிவுட் சென்றார்.ராமதாஸ் புகைப்பது தவறு, விற்பது தவறில்லை என்றார். சூர்யா அப்பவானார்.கமலின் தசாவதாரம் தான் தன் வாரண முயற்சிக்கு முன்னுதாரணம் என்றார்.
ஸ்டாலினும் அழகிரியும் கோபாலபுரத்தில் கலைஞராஷ்டமி நடத்தினர். தமிழர்கள் டெலிபோனினார்கள், டெடிக்கேட் செய்தனர். ஆங்காங்கே குண்டு போடப்பட்டது. இந்தியர்கள் தலையில் மதச்சார்பிண்மை என்ற பேரில் மிளகாய் அரைக்கப்பட்டது.
பிஜேபி ராஜஸ்தானில் தோற்றது, காங்கிரஸ் டெல்லியில் வென்றது.
சத்யம் பொய்த்தது, பொய்க்காமல் மழை விவசாயிகளின் வயிற்றில் அடித்தது. பெங்களுர் பெங்களூரு ஆனது. குண்டு குழிகள் சீர் செய்யப்பட்டன. இந்தியா தங்கம் வென்றது,மீடியா கவரேஜ் செய்தது. மும்பை போர் பூமியானது,மீடியா தீவிரவாதிகளை கவர் செய்தது. மக்கள் வீட்டைத்தாண்டி இந்தியா கேட் வந்தார்கள். கோஷமிட்டார்கள் , ஏ.கே.47 கேட்டார்கள். விலைவாசி ஏறியது,பணவீக்கம் இரண்டு டிஜிட்டைத் தாண்டியது.
மொத்ததில் மக்களின் பொறுமை சோதிக்கப்பட்டது.இந்திய பொதுஜனம் இனியும் பொறுக்குமா தெரிவில்லை. வரும் பொதுத்தேர்தல் தான் அதற்கு விடை சொல்ல வேண்டும்
பழையன கழிதலும் புதியன் புகுதலும் கால வகையினானெ. இது புத்தாண்டு தீர்மானம போல் தோன்றினாலும் , நம்ம கலைஞருக்காக இந்த பொங்க போகி புத்தாண்டில் இதை நினைவில் கொள்கிறேன்.
பி.கு.: யாருடைய எழுத்து நடை என்று யுகிக்க முடிந்தவர்கள்,முதல் பத்தி தாண்ட மாட்டார்கள், யுகிக்க முடியாதவர்கள் தமிழ் படிக்க தெரிந்திருக்க மாட்டார்கள்.
Related post : கிச்சடி (ஊசிப்போன)
