சினிமா, செய்தி விமர்சனம்September 27, 2009 7:00 pm

தொடர் தோல்வியை சந்தித்து வரும் விஜய்க்கு இது செக்மேட் காலம். தளபதி என்கிற சிம்மாசனம் விநியோகஸ்தர்களால் கட்டப்பட்டது , காப்பாற்ற சந்திரசேகரை அழைத்தால் பரவாயில்லை. அரசியல் நோக்கி போகிறேன் என்ற பிரம்மாஸ்திரம் விடுவது விடலை குஞ்சுகளை உசுப்பேற்றும், ‘ஆதி’களை விற்க உதவாது.

ரசிக மணிகளால் சூழ்ந்த வலைபின்னல் தான், புரட்சி ஸ்டார், சூப்பர் தலைவர் எல்லாமே. சற்று உற்று நோக்கினால் அதில் பணம் என்கிற மாய வஸ்து தான் சினிமா வியாபாரிகளை பட்டங்களை வார்த்து பராமரிக்கச் சொல்கிறது. ‘A cinema is a product that is completely unknown , unless the wrapper is opened’.’

வணிக சினிமாவின் கட்டாயம் ‘matiney idol’. நீங்கள் அதுவாக இருக்கும் வரை எங்கள் பாக்கியம்.உங்கள் மனசாட்சி உறுத்தலுக்காகவோ, வருமான வரிக்கு பயந்தோ கல்யாணங்கள் நடத்துவது, உறுப்பு தானம் செய்வது , உங்களுக்கு புண்ணியம். ஆ மேலே , சாக்கடையை கழுவ இறங்கினால், நாத்தம் தாங்காமல் , மறுபடியும் (எஸ்.)ஏ.சி. காற்றில் பழுப்பேற்றிய சிவப்பு காணாமல் போய் விடும்.

பொது, பினாத்தல், சினிமாOctober 15, 2008 5:13 am

இந்த வெள்ளோட்டத்தில் என்னையும் இணைத்து கொள்கிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
சகல கலா வல்லவன் வந்த சமயம்.

2. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
சூப்பர் ஸ்டாரின் ‘சிவா’. நினைவு சின்னம் மற்றும் மை டியர் குட்டி சாத்தான் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்க இதற்கு தான் டிக்கெட் கிடைத்தது.

3. என்ன உணர்ந்தீர்கள்?
டைட்டில் கார்டு மிஸ் செய்யவில்லை என்பதை. எப்படி இப்படி ஒரு படம் எடுத்தார்கள் என்று பாராட்டவும் (பின்னாளில் திட்டவும் ) வசதி பட்டது.

4. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா . ஒரு த்ரில்லர் படத்தை நகைச்சுவை கொண்டு , கொன்றுவிட்டார்கள் என்று தோன்றியது.

5. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்ரமணியபுரம்.
இப்படிப்பட்ட நல்ல படங்களை சென்னை தேவியில், படம் வெளி வந்த பத்தாவது நாள் , எந்த விமர்சனமும் படிக்காமல் பார்க்க கடவது என்று
ஆண்டவனை பிராத்தனை செய்தேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லை அல்லது இஷ்டமில்லை என்று வைத்துக்கொள்ளலாம்.

7. தமிழ்ச்சினிமா இசை?
Dhool.com SOTD மேல் மட்டும் ஒரு தனி பிரியம்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
Boot polish, எத்தகைய தாக்கம் என்றால் , படத்தின் நாயகனுக்காக தேம்பி தேம்பி அழுதது.

9. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
ரஜினியின் ஜெ.க்கு எதிரான அறிக்கை.

10. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கிளேசேவாக தோன்றினாலும் மைடியர் குட்டிச்சத்தனின் 3D சினிமா.

11. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை ஆனால் இஷ்டமுண்டு என்று வைத்துக்கொள்ளலாம். தமிழ்ச்சினிமா மேம்பட வி. சி.டியில் பார்க்காமல் 180+ 90 + 15 கொடுக்க தயார்.

12. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாக இருக்கிறது என்று நண்பர் வட்டாரத்துக்குள் மட்டும் தம்பட்டம் அடிக்க ஆசை.

13. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இருக்கவே இருக்கிறது கருப்பு வெள்ளை படங்கள், மற்றும் பேசும் படம் பேசாமல் இருக்கும் என்ற நப்பாசை.

சினிமாNovember 27, 2006 7:40 am

இந்த பாடலுக்கு மூன்றாவது சரணம் இருந்தால். இதோ என் கற்பனை முழுப்பாடலுடன்.

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமேனடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிபோன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

விழித்திரையில் தெரிவதெல்லாம் வெள்ளை மேகமே
வழிதோறும் தேடுகின்றேன் உயிரின் முகமே
கவிதைகளில் வாழ்த்தி நின்றேன் உன்னை மட்டுமே
கானல் நீராய் கரைந்து போனேன் உன்னில் மட்டுமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

சினிமா 7:36 am

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையே

பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை

விழியில் விழும் தூசி தன்னை அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் அன்பே

பாடல் : கவிஞர் வாலி
இசை : ரகுமான்
படம் : சில்லுன்னு ஒரு காதல்

சினிமாSeptember 12, 2005 1:41 pm

shreya nagarjuna

விஜய் நடிக்க , செல்வா இயக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசைமைத்து வெளிவந்திருக்க வேண்டிய தெலுங்கு டப் படம். ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் புண்ணியத்தில் ஒரு நல்ல படம் என் ஞாயிற்று கிழமை காலையை ஆக்கிரமித்தது. (more…)

சினிமாAugust 28, 2005 7:22 am

fazil

நிறைய எதிர்பார்க்க வில்லையென்றாலும் கண்ணுக்குள் நிலவு ஏற்படுத்திய ஏமாற்றம் இன்னும் மறையவில்லை. இளையராஜா, ஆனந்த குட்டன், பாசில் கூட்டணியில் மற்றுமொரு படைப்பு ஒரு நாள் ஒரு கனவு. (more…)