பொது, பினாத்தல்January 12, 2009 8:01 pm

அடுத்த வருடம் வருவதற்கு இன்னும் முன்னூறு சொச்ச நாட்கள் இருந்தாலும் , புது வருட தீர்மானமாக ஏதாவது எழுதியாகணும்.

நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் விதமாக சந்தோஷங்களும் துக்கங்களும் நிரம்பிய வருடம்.

நான் அப்பாவானதும் , அதற்கு சிறிதும் பிரயதனபடாமல் ,மனைவியை வேதனைக்குள்ளாக்கி ,என்னால் குடுக்க முடிந்த அருகாமை என்ற ஓன்றுக்காக மட்டும் திருச்சிக்கும் பெங்களுருக்கும் அலைந்தது புதிது. நிதானத்தை இழந்து தவறிழைத்து பின்பு வருத்தப்பட்டது எல்லாமே ஓரு நாடக டிவிஸ்ட் தான்.

பெயர் வைக்க எல்லாரிடமும் போராடுவேன் என்று எண்ணியதும் பொய்த்து விட்டது.ஒழுங்கு என்ற வார்த்தை தினசரி நடவடிக்கையில் ஒன்றானது. பெருத்த ஏமாற்றம் வந்தாலும் மீண்டு வந்தது புத்துணர்ச்சி அளிக்கிறது.

ஷங்கர் எந்திரனுக்காக மூன்று தயாரிப்பாளர் மாறினார். சூப்பர் ஸ்டார் ‘கடமையை செய், பலனை எதிர்பார்’ என்றார். முருகதாஸ் பாலிவுட் சென்றார்.ராமதாஸ் புகைப்பது தவறு, விற்பது தவறில்லை என்றார். சூர்யா அப்பவானார்.கமலின் தசாவதாரம் தான் தன் வாரண முயற்சிக்கு முன்னுதாரணம் என்றார்.

ஸ்டாலினும் அழகிரியும் கோபாலபுரத்தில் கலைஞராஷ்டமி நடத்தினர். தமிழர்கள் டெலிபோனினார்கள், டெடிக்கேட் செய்தனர். ஆங்காங்கே குண்டு போடப்பட்டது. இந்தியர்கள் தலையில் மதச்சார்பிண்மை என்ற பேரில் மிளகாய் அரைக்கப்பட்டது.

பிஜேபி ராஜஸ்தானில் தோற்றது, காங்கிரஸ் டெல்லியில் வென்றது.

சத்யம் பொய்த்தது, பொய்க்காமல் மழை விவசாயிகளின் வயிற்றில் அடித்தது. பெங்களுர் பெங்களூரு ஆனது. குண்டு குழிகள் சீர் செய்யப்பட்டன. இந்தியா தங்கம் வென்றது,மீடியா கவரேஜ் செய்தது. மும்பை போர் பூமியானது,மீடியா தீவிரவாதிகளை கவர் செய்தது. மக்கள் வீட்டைத்தாண்டி இந்தியா கேட் வந்தார்கள். கோஷமிட்டார்கள் , ஏ.கே.47 கேட்டார்கள். விலைவாசி ஏறியது,பணவீக்கம் இரண்டு டிஜிட்டைத் தாண்டியது.

மொத்ததில் மக்களின் பொறுமை சோதிக்கப்பட்டது.இந்திய பொதுஜனம் இனியும் பொறுக்குமா தெரிவில்லை. வரும் பொதுத்தேர்தல் தான் அதற்கு விடை சொல்ல வேண்டும்

பழையன கழிதலும் புதியன் புகுதலும் கால வகையினானெ. இது புத்தாண்டு தீர்மானம போல் தோன்றினாலும் , நம்ம கலைஞருக்காக இந்த பொங்க போகி புத்தாண்டில் இதை நினைவில் கொள்கிறேன்.

பி.கு.: யாருடைய எழுத்து நடை என்று யுகிக்க முடிந்தவர்கள்,முதல் பத்தி தாண்ட மாட்டார்கள், யுகிக்க முடியாதவர்கள் தமிழ் படிக்க தெரிந்திருக்க மாட்டார்கள்.

Related post : கிச்சடி (ஊசிப்போன)

பொது, பினாத்தல், சினிமாOctober 15, 2008 5:13 am

இந்த வெள்ளோட்டத்தில் என்னையும் இணைத்து கொள்கிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
சகல கலா வல்லவன் வந்த சமயம்.

2. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
சூப்பர் ஸ்டாரின் ‘சிவா’. நினைவு சின்னம் மற்றும் மை டியர் குட்டி சாத்தான் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்க இதற்கு தான் டிக்கெட் கிடைத்தது.

3. என்ன உணர்ந்தீர்கள்?
டைட்டில் கார்டு மிஸ் செய்யவில்லை என்பதை. எப்படி இப்படி ஒரு படம் எடுத்தார்கள் என்று பாராட்டவும் (பின்னாளில் திட்டவும் ) வசதி பட்டது.

4. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா . ஒரு த்ரில்லர் படத்தை நகைச்சுவை கொண்டு , கொன்றுவிட்டார்கள் என்று தோன்றியது.

5. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்ரமணியபுரம்.
இப்படிப்பட்ட நல்ல படங்களை சென்னை தேவியில், படம் வெளி வந்த பத்தாவது நாள் , எந்த விமர்சனமும் படிக்காமல் பார்க்க கடவது என்று
ஆண்டவனை பிராத்தனை செய்தேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லை அல்லது இஷ்டமில்லை என்று வைத்துக்கொள்ளலாம்.

7. தமிழ்ச்சினிமா இசை?
Dhool.com SOTD மேல் மட்டும் ஒரு தனி பிரியம்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
Boot polish, எத்தகைய தாக்கம் என்றால் , படத்தின் நாயகனுக்காக தேம்பி தேம்பி அழுதது.

9. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
ரஜினியின் ஜெ.க்கு எதிரான அறிக்கை.

10. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
கிளேசேவாக தோன்றினாலும் மைடியர் குட்டிச்சத்தனின் 3D சினிமா.

11. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை ஆனால் இஷ்டமுண்டு என்று வைத்துக்கொள்ளலாம். தமிழ்ச்சினிமா மேம்பட வி. சி.டியில் பார்க்காமல் 180+ 90 + 15 கொடுக்க தயார்.

12. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாக இருக்கிறது என்று நண்பர் வட்டாரத்துக்குள் மட்டும் தம்பட்டம் அடிக்க ஆசை.

13. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இருக்கவே இருக்கிறது கருப்பு வெள்ளை படங்கள், மற்றும் பேசும் படம் பேசாமல் இருக்கும் என்ற நப்பாசை.

பொதுAugust 8, 2008 11:10 am

யூ ஆர் அனந்தமூர்த்தி பினத்தலில் இருந்து ஒரு முத்து? ” மசூதிகள் மற்றும் கோவில்கள் , தீவிரவாதம் புனையும் இடமாக மாறி வருவதை கண்டு, மனம் புண்படுகிறது ”

இப்படி தான் இடைசொருகலில் பொய்களை விதைக்கப்பபடுகின்றன.

பொது, பினாத்தல், TamilAugust 1, 2008 5:04 am

எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டாலும் , அந்த ஆசை இன்னும் விடவில்லை. எப்படியாவது ரெண்டு வரி , படிக்கிற மாதிரி இருந்தா சந்தோஷம்.

சமிபத்திய வெடிகுண்டு நிகழ்வுகள் எதுவும் நல்லத்துக்கு என்று தோனுது. வெகுளித்தனம் என்பது என் அடுப்பங்கரை வரை தான் , என் அடி வயிரை தொட்டால், என்று மக்கள் உணரும் வரை , இந்த திருவிழா தொரட்டும்.

கடந்த முன்று மாதங்களாக நடந்த விளையாட்டு திருவிழா (அதான் IPL ,French Open, Wimbledon, EURO 2008 ), இல்லாமல் சேனல் மாற்றம் யுக்தி இல்லாமல் தவிக்கிறது எங்கள் வீட்டு ரிமோட். எல்லாம் ஒலிம்பிக்ஸ் வரும் வரை தான்.

ஆடி காத்து , உஸ்மான் ரோடு அழைத்தது. ஆனால் அந்த பழைய பொலிவு இல்லை. இங்கே CMH ரோடும் மரங்கள் இல்லாமல் கலை இழந்து நிற்கிறது. பெங்களுரும் , நகரமயமாக்கலுக்கு (உச்சகட்ட) தப்பவில்லை.

பொதுJune 27, 2007 9:11 am

பொது, பினாத்தல், TamilMay 25, 2006 7:14 pm

மாசாமாசம் நான் படியேறும் இசைக்கோயில். இளையராஜாவின் பாந்தமான முகமும், மைக்கேல் ஜாக்ஸ்சனின் கத்திரி முடியும் ஒருங்கே காட்சிச்தரும் உற்சவத் தேரோட்டம்.

இது என்ன பாட்டு ஜிக்கு புக்கு ரெயிலு ஒண்ணுமே புரியல, இங்கிலீஷ் பாட்டு மாரி இருக்கு.

இது மைக்கேல் ஜாக்ஸ்சன் சரி , அது யார் ஜானட்?

எவ்வளவு தடவ சொல்றது கடைசிலே இங்கிலீஷ் போடாதீங்க, கேப் இருந்தா பரவால்ல.

எத்தன கேஸட் போட்டாலும் தீராது ,மொட்ட மொட்டதான்.

பாக்கெட் மணி இல்லாட்டாலும் ரெக்கார்டு புக் வாங்கணும்ன்னு சொல்லிட்டு ஒரு 60க்கோ ஒரு 90க்கோ பாட்டு லிஸ்ட் எழுதி கொடுத்துட்டு வருவோம். டிரிபிள் கொஞ்சம் போதும் , பேஸ் அதிமாக வேணும் இப்படி ஏகப்பட்ட அறிவுரைகள் காதில் வாங்கப்படாது என்று தெரிந்தும் கொட்டி விட்டு வருவோம்.

பதிவாயிட்டு வரும் வரையில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள். 23 ஜீலை திபாவளி பட ரிலீஸ் போல பரப்பரப்பு பற்றிக் கொள்ளும். கேஸட் கவர் புதுப் பொண்டாட்டி போல் அள்ளி கொள்வோம். எழுத்து கூட்டி படிக்காத குறையாக, எந்த கேஸட் கம்பெனி என்பது வரை ஆராய்வோம்.

ரிலீஸ் தேதி அன்று வீடே களேபரபடும். பட்டியலின் படி வரிசையாக பதிவாகவில்லை என்றால் அதுக்கும் அன்றே ஒரு நடை.

நான் சொன்னது மூணாவது பாட்டு, இதில நாலாவது பேத்தாஸ் ஸாங் ரெக்கார்டாகி இருக்கு. இப்பவே மாத்தி கொடுங்க.

உங்க அதிர்ஷ்டத்தைப் பொருத்து அன்று யேசுதாஸின் ரசிகர் வராமல் இருந்தால், அப்பா (கடை ஒனர்) பிஸியாக இல்லாமல் இருந்தால், உங்கள் கேஸட் புதியதாக இருந்தால்.

தொடரும் ..

பொது, பினாத்தல், TamilMay 23, 2006 6:45 pm

உனக்கென பிறந்தது உனக்கேதான்
கிடைச்சத வைச்சுக்கோ அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் - உண்மை
விடியும் பார் விடியும் பார்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

நீ விரும்பற பொண்ண விட உன்ன விரும்பற பொண்ண காதலி. வாழ்க்கை நல்லாயிருக்கும்.

காதல் என்பது எது வரை கல்யாணம் காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை கழுத்தினில் தாலி விழும் வரை

பொது, பினாத்தல், TamilMay 22, 2006 6:22 pm

Where were you?
நிஜமாகவே மறந்து போய்டுமோன்னு பயமா இருக்கு. பழைய பதிவுகளை பாத்ததுக்கப்புறம் ஒரு தெம்பு. அட நாம கிறுக்கனாதா இதுன்னு ஒரு கிளுகிளுப்பு. இந்த சாக்குல ஒரு பதிவு ரெடி.

தொடர்ந்து எழுதாததற்கு காரணம் கம்பெனி மாறுனது தான். என்னோட தமிழ் தரவுகள் எல்லாம் காலி. முரசு ப்ள்க்கின் நோட்பேடில் ஏனோ வேலை செய்ய மறுக்கிறது. சுரதா கொஞ்ஞூண்டு படுத்தியது.

இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாத்தித்யனுக்காக இந்த புது டூல். புது தட்டச்சு முறை என்றாலும் ஆர்வமிருப்பதால் முயற்சிகளை தொடர்வேன். சித்திரமும் கைப்பழக்கம், எந்தமிழும் பளாக் பக்கம்.

பொது, TamilJanuary 20, 2006 8:40 am

சக வேலையாளிடம் என்ன நைட்டு ஊருக்கான்னு கேட்டப்ப இன்னிக்கு திங்களுன்னு படல. இப்பவே வாரயிறுதி வந்துட்டதாக ஒரு பிரமை. நம்ம சகா HPல வேல செய்யுறான். அவனுக்கு இந்த வாரம் முழுசும் லீவு. இது HPயில வருஷா வருஷம் நடக்கும் விடுமுறை திருவிழா. நமக்குதான் கொடுத்து வக்கலே. ஹும் இருந்தாலும் வெட்டி முறிக்க எதுவும் இல்லாததால கடந்த வருஷத்த திருப்பி பாக்கறது நல்லதுன்னு தோனுது.

ராஜ்தீப் சர்தேசாய்க்கு ஜ.பி.என், நமக்கு சமையல். சப்பாத்தி மாவு பிசைவது, சுடுதண்ணி வைப்பது, டீ தயாரிப்பது ( சக்கர எப்பவும் கம்மியாத்தான் போடுவேன் , இதக் கூட ஒழுந்கா செய்யத்தெரியலான்னு கேட்டற கூடாதில்லையா? ) , மற்றும் சாப்பிட்டு விட்டு குறை சொல்வதுஇப்படியாக அம்மாவுக்கு ஒத்தாசை என்ற பெயரில் சமைக்காமல் சலித்துக் கொண்டதை இப்போது தொடர எண்ணம்.

நூடுல்ஸ் நன்றாக செய்ய வருகிறது. ஏற்கனவே சுடுதண்ணி கொதித்து வைத்து பழகியிருந்ததால் மட்டும் முயற்சி செய்யவும். சாம்பாருக்கு பருப்பு ஒன்னு விட்ட சித்தப்பா மாதிரி தெரிந்தாலும் சேர (வேக) மறுக்கிறது. உருளைக் கிழங்கு ஆபத்பாண்டவன், வெங்காயமும் தான். தேங்காய் கொஞ்சம் காஸ்டிலி. மிக்ஸிக்குதான் கட்டி வைக்கணும்ணு அடம். தயிர் பிரச்சனையில்ல, உறைக்கு வைச்சா போதும். அப்புறம் ஊறுகாய் அதுவும் மாங்காய்+பூண்டு excellent combo. தோசைக்கு கல்லா கல்லுக்கு தோசையா? விவாதம் அடுத்த ஆண்டும் தொடரும்.

Coming to books, வாங்கப்பட்ட ஏழெட்டு புத்தகங்களில் அ.முத்துலிங்கம் கதைகள் , காகித மலர்கள், Sri Lanka : Voices from a War மட்டுமே வாசிக்கப்பட்டது. வாசிப்பிற்கும் அனுபவத்திற்கும் இடையில் மாட்டிக் கொள்வது
நேரமும் பொறுமையும் தான். இதைப் பற்றியே ஒரு தனிப் பதிவிடலாம்.

உருப்படியான விஷயங்கள் சில நண்பர்கள் கிடைத்ததுதான். முகம் பார்க்காமல், தோள் குலுக்காமல் நிதானமாக எச்சில் சிகரெட்டிலும், மிஸ்சுடு காலிலும் நசுங்காத நட்பு. வெட்டி அரட்டைக்கும், வெறும் நடைக்கும் அலைந்த கால்கள், இப்போது கல்யாணத்திற்கும் நகர மறுப்பது காரணம் காலம் தான் நண்பர்களே (கொஞ்சூண்டு நானும் ). உருப்போட்ட (உருப்படாத) விஷயங்கள் பிரஞ்ச், சமஸ்கிருத முயற்சிகள்.

அன்பர்களுக்கு விடுமுறைக் கால வாழுத்துக்கள்

பொது, TamilDecember 15, 2005 1:49 pm

Millers 46

மேலே கூறிய சொற்களை கூகிளியதால் இரண்டு சுட்டி கிடைத்தது. ஒன்று ஹிந்து நாளிதழில் இந்த ரெஸ்டாரென்டைப் பற்றிய அறிமுகம் , இன்னொன்று அனிதா போராவின் அங்கலாப்பு. இதப்போய் ஏன் தேடினாய் அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு விளங்குது, ஆனா பாருங்க பசின்னா நமக்கு , பக்கத்துல எதாவது கவர்ச்சியா போட்டுருந்தா உள்ள நுழைஞ்சுடுவேன். ஆனா ஆபிஸ விட்டு பத்தடி நடந்தோன்னதான் ஞாபகம் வருது பணமில்லன்னு. பணமில்லாட்டி என்ன கடன் அட்டை இருக்கேங்கிற தகிரியத்தில உள்ள போனேன். நம்ம வெயிடர் புண்ணியவான்கள் எல்லாம் டெக்ஸன் பாணில இடது பக்கம் ஒரு பர்ஸ மாதிரி ஒண்ணு பெல்ட் போட்டு இடுப்போட கட்டியிருந்தாங்க. மக்கா ஏதோ விவகாரமா இருக்கேன்னு பாக்க சொல்ல மேதகு வெயிடர் மெனு கார்டு நீட்டினார். பளிரென்று தெரிந்தது பக்கார்டி, ரொமனாவ், மற்றும் இன்னபிற சோம பானங்கள். இது வேணாமேன்னு கூச்சப்பட்டு ஒரே ஒரு ஸ்மால் என்றேன். அப்பறம் நடந்ததுதான் உச்சகட்டம்.

Can you explain this hot mexican chicken ? Don’t you provide bread/rice with this, i dont see them in the menu”

“Yes, we provide bread , rice with some vegetable”

“Will that be too small?”

“No sir. let me bring you sizzler”

“Fine”

ஒரு பத்து நிமிஷம் கழிச்சு சூடா வுட்டன் பிளேட் மேலே இரும்பு பாத்திரத்தில வந்தது Hot mexican chicken. சாப்பிட வசதியா ஒரு கத்தி வேற [ yes a real one]. சரி யறங்கு ராசா. கொஞ்சூண்டு சிக்கன் வெற்றிகரமா வெட்டி தொட்டுக்க சாதத்தை தேடினேன். ஒரே கறிஞ்ச மணம். ஏனென்று வினவியதில் இதுதான் sizzlerராம். கடனாய் சாப்பிட்டதற்கு தண்டம் 391+ 10.

வீரலெட்சுமிக்கு போனா கூட்டு பொறியல், மல்லி துவையல், பருப்பு, சாம்பார், ரசம், தயிர்ன்னு புல் மீல்ஸ். எல்லாம் 22க்கு. இனி வீரலெட்சுமியே துணை.

பொது, TamilNovember 29, 2005 12:22 pm

one day in chennai
ன்னதான் மூன்று வருடத்திற்கு மேல் புழங்கிய ஊராக இருந்தாலும் அன்னியமாக பட்டது சென்னை. 14 மணி நேரம் பயண களைப்பு கத்தி பாறை சிக்னலில் மறைந்தது. நேரு மாமாவும் மறைந்திருந்தார் ஒரு பாலத்திற்காக. ஊர் சுற்ற ஏதுவாக மவுண்ட ரோடு செல்லும் பஸ் ஒன்றில் தொத்திக்கொண்டேன். மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை என்பதில் உள்ளுக்குள்ளே குரூர மகிழ்ச்சி. மறந்த பஸ் நம்பர்கள் சட்டென நினைவுக்கு வந்தன. ரொம்பவும் படுத்தியது D70. (more…)

பொது, TamilNovember 5, 2005 7:03 am

என்னடா ‘long time no see’ யாரும் சொல்லிர கூடாதுங்கிறதுக்காக இந்த பதிவு. தலைவருக்கு நிலம சரியில்லை. மத்தளதுக்கு இரண்டு பக்க இடிங்கிறது மாதிரி ஆளாகுக்கு குத்து விட புஷ் இப்ப தன்னோட பாதையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். (more…)

பொது, TamilOctober 25, 2005 6:01 am

vikatan

த்து ரூபாயில் வண்ண வண்ண உடைகளில் வகை வகையாய் சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள், அரட்டை அரங்கிகளின் அப்பளம், அடுத்த வீடு, அவ்வளவு தான், உன் மூக்கின் மணமென்ன கேள்வி - பதில் பகுதி, ஆண்கள் பள்ளியில் அகப்பட்ட (more…)

பொது, TamilOctober 17, 2005 5:36 pm

trichy

நீர் வரத்து குறைந்திருந்தாலும் சிறுவர்களின் குதூகலத்துக்கு குறைவில்லாமல் , சிறு சிறு மணல் மேடுகளுக்கு நடுவில் காவிரி. இதை ரசிக்க கரண்ட் இல்லாத ஒரு ஞாயிறுக்கிழமையும் அது இல்லாமல் இயங்காத தொலைக்காட்சியும் தேவையாயிருந்தது. அப்படியே நகரத்தையும் சற்று பார்க்கலாமென்ற ஆசை சற்று நியாமாக பட்டதால் வீர்ரென்றேன். எங்கெங்கும் பார்கினும் போஸ்டர்கள், புதிதாக துவங்கப்பட்ட கட்சிக்கு பத்தாம் ஆண்டு துவக்க விழா, சிலரை வானளவு புகழ்ந்தோ , சிலரை நன்றாக வஞ்சியோ சுவரெங்கும் கருப்பு வெள்ளைகளில் அர்த்த மில்லாத கிறுக்கல்கள். முடிக்கப்பட்ட பாலம் ஒன்று, முடிஞ்சுடும் முடிஞ்சுடும் என்று இழுவைப் பாலம் இன்னொன்று. (more…)

பொதுOctober 8, 2005 2:34 pm

mammotty

டுத்ததா சிலப்பதிகாரமா மணிமேகலையான்னு யோசிச்சு மாசம் ஒண்ணாச்சு. நாமெல்லாம் எழுதவே ஆரம்பிச்சிருக்க வேணாமோ? பெருந்தலைகளோட படைப்புகள் படிக்க படிக்க பேனா ஸாரி கணிணி பக்கம் வரதான்னு மனசு குறுகுறுக்குது. படைப்புலகில் வார்த்தைகளை வடிக்கும் விதமும், காட்சிகளை விவரிக்கும் பாங்கும் இருக்க எவ்வாறு வேண்டுமென்பதை ஒவ்வொரு வரிகளிலும் தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள். புதுப்புது உலகத்தை ஒவ்வொரு படைப்பிலும் வரைந்து விட்டு செல்கிறார்கள். (more…)

பொது, இணையம்September 27, 2005 4:06 pm

internet

போதும், போதும் எதுக்கும் ஒரு அளவிருக்கு. கூகிளின் தற்போதைய மந்திரம் இதுதான். இனி தாங்கள் பட்டியலிடும் வலைத்தளங்களின் எண்ணிக்கையை முகப்பில் வெளியிட மாட்டார்களாம். அதாவது தேடுயந்திரத்தில் புது தளங்கள் அவ்வளவு எளிதாக சேர்க்கப்பட பட மாட்டாது. போதுமான அளவிற்கு தேடுயந்திரத்தில் தளங்கள் திரட்டப்படுவதால் (more…)

பொதுSeptember 21, 2005 11:33 am

advertisement

Cricket got better with live relay. நேரடி ஒளிபரப்பு கிரிக்கெட்டை பல மடங்கு உயர்த்தியது. இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் தீபாவளி ரீலிஸ் படங்கள் போல் பரபரப்பாயின. கிரிக்கெட் வெறியர்கள் மைதானத்தை விடுத்து தொலைக்காட்சிப்பெட்டி முன் கூடினர். மட்டையாளர்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் இலவச ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஓவர் முடிந்தபின்னும் தீவிர அலசல் நடந்தது. விளம்பர இடைவேளை இதற்கு தோதுபட்டது. ஒளியும் ஒலியும் விளம்பரங்கள் தூற்றியவர்கள் இதை சகித்தனர். நிறுவனங்கள் தங்களுக்கான ஸ்லாட்டை தேர்ந்தெடுக்க விரைந்தனர். (more…)

பொதுSeptember 20, 2005 6:10 pm

games

எனக்கும் கிரிக்கெட்டுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். மற்ற விளையாட்டை போலில்லாமல் இதில் நான் சராசரிக்கும் கீழ்.. இதைக் குறித்து எனக்கு எப்போதும் வருத்தமும் இருந்ததில்லை. இதற்கு காரணம் எங்கள் தெருவில் இன்ன விளையாடுவது என்றில்லாமல் புட்பால், ஹாக்கி, பாட்மிட்டன், என்று எதையும் விட்டு வைத்ததில்லை. (more…)

பொதுSeptember 18, 2005 10:11 am

new hero is born

வாராவாரம் தியேட்டர் பக்கம் போயே ஆகணும். சினிமா பைத்தியமில்ல, இருந்தாலும் செய்யரதுக்கு எதுவும் இல்லாததால பாலாஜிக்கு போன் போட்டேன். Best Friend ஒடுது வாங்கன்னாங்க. சரி ஆட்டோவ புடி. அரைமணி நேரம் மிஸ்ஸிங். சரி பரவாயில்லன்னு பாத்தேன். பெரிசா ஒண்ணும் இல்ல விசிலடிறத தவிர.

ரஹ்மான் தானோட இசையை யாருக்கு கொடுக்கனும் தெளிவா தெரிஞ்சு வச்சுரது நல்லது. ஒரு மைனஸ் சமன்படுத்த ஒரு ப்ளஸ் வேணும். அதான் ஜேம்ஸ். ராம் கோபால் வர்மா தயாரிப்பு. பட்டய கிளப்பிருக்காங்க. சரியான கரம் மசாலா. சென்னைல பாக்க கொடுத்டு வக்கலயேன்னு வருத்தமா இருக்கு. பாம்பேல ஒடுமான்னு தெரியல , since the hindi film crowd has become metrosexual. அப்புறம் பெங்களுருக்கும் வந்தாச்சா சிக்னலுக்கு சிக்னல் எப்.எம். காட்டு இரைச்சல பாட்டு வேறயான்னு கேக்க தோனுது.

பொதுSeptember 15, 2005 4:06 pm

whats in the name

‘அம்மனுக்கு பச்ச புடவதான் இல்ல சிவப்புதான். ரெண்டையும் போடரத தானே ஒப்புக்கிட்டோம். இப்ப என்ன தகராறு. பத்து வருசங் கழிச்சு நடக்கர திருவிழா ,இந்த விஷயத்துக்கெல்லாம் ஏய்யா தகராறு பண்ணிறீங்க.’ இப்படி விஜயகுமார் சொல்வதாக ஒரு படம். பேர் நினைவில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியனை போல் இன்னொரு முத்து. (more…)

பொதுSeptember 14, 2005 5:56 am

idiot box

சுப்ரபாதம் சொல்ல , சுபம் சொல்லாம இரவு முட்டும் இடுப்ப காட்ட, சுளுக்கெடுத்தா மருத்தவம் சொல்ல, குண்டு வெடிச்ச ப்ளாஷ் அடிக்க , புடிச்ச பாட்ட கேட்டு முழுசா போட , வந்தாச்சு ஒரு தொலைகாட்சி. கணிப்பொறி நண்பர்கள் என்றும் சொல்லும் வாக்கியம். “மச்சி எல்லாமே காப்பி பேஸ்ட் தான்”. அதே போல தொலைக்காட்சியும் ஆகி விட்டது. (more…)

பொதுSeptember 9, 2005 6:06 pm

சுருக்கமா தமிழ் கல்யாணம்.மாப்பிள்ளையின் தந்தை கழக பின்ணணி கொண்டவர். நினைவு தெரிந்த நாள் முதல் இவரின் வர்ணங்கள் கறுப்பு, சிவப்பு மட்டுமே. வை.கோ உரை என்றால் கொள்ளை பிரியம். விடுதலை , உண்மை இவர் வீட்டில் தான் நான் முதலில் கண்டது. எழுபதுகளில் இவர் தொடங்கிய கழக முயற்சிகள் எல்லாம் இன்றும் கவனிக்கப்படவில்லை. பேராசியர் அன்பழகன் அடிக்கடி எங்கள் வாதங்களில் தவறாமல் இடம் பெறுவார். திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் வரவேற்ப்பறையில் இடம். இப்போது உடல் நலம் குன்றியதால் நண்பரின் தந்தை மாறத்தான் செய்தார். குடும்ப பாரம்பரியம் தடுத்தாலும் தாலிக்கு இடம் தந்தது ஆச்சரியம்தான்.

பொதுSeptember 8, 2005 7:46 am

Us and Togther

எங்க கேங்குல ஸாலிடா ஆறு பேர். இன்னும் ரெண்டு மூணு பேரையும் சேத்துக்கலாம், ஆனா இந்த ஆறு பேர்தான் பிரதானம், அரட்டை, தண்ணி, பிக்னிக், கம்பென் ஸ்டடி, இப்படி எல்ல கூட்டு சதிக்கும் இந்த ஆறு பேரும் ஆஜர். விஷயம் என்னான்னா இந்த கழுதைகளுக்கு எல்லாம் இப்ப ஏழு,ஏழர வயசாச்சு. (more…)

பொதுSeptember 7, 2005 2:41 am

judges

அந்த சம்பவம் நிகழ்ந்தது பள்ளி பருவத்தில். இனி ஒருவரை ஒருவர் பார்க்க மாட்டோம் என்று உணராத வயது. பத்தாம் வகுப்பு பரிட்சை முடித்தாகவிட்டது. நல்ல வெயில் காயும் ஏப்ரல். கேட்டை தொடும் நேரம் இருவர் கட்டி புரள்கிறார்கள். நபர் ஒன்று என்னோட நெருங்கிய சிநேகிதன், இன்னொருவன் நாட்டாமை. சிநேகிதனின் கோபம் புரியவில்லை. நல்லதானே இருந்தான், என்னடா ஆச்சு இவனுக்கு. (more…)

பொதுSeptember 6, 2005 6:59 am

bangalore

இந்த கன்னட தேசத்தில் இப்படி ஒரு வசனம் அதுவும் ரெண்டாவது மொறயா?

மொத தடவ ஒரு சிக்னல்கிட்ட. நம்ம மாமாக்கள் டிராபிக்க ஒழுங்கு பண்ண , நம்ம திருவாளர் பொது ஜனம் சகதர்மினியோட வந்து நின்னார் பைக்குல, அதுவும் மஞ்ச கோட்டதாண்டி. மாமா டென்சனாகி கன்னடத்துல கத்த, திருவாளர் “ஹிந்தில சொல்லு, this is india”. மாமா பதிலுக்கு ,” இது கர்நாடகா,கன்னடத்துல தான் சொல்லுவேன், தள்ளி நில்லு” (more…)

பொது 3:52 am

kartina

இயற்க்கை சீற்றம் கொண்டால் சூறாவளியும் வரலாம் , சுனாமியும் வரலாம். தகுந்த முன்னெச்சரிக்கை இல்லை, மக்கள் இடம்பெயருமாரு எச்சரித்தும் பயனில்லை, நிர்வாகம் வாக்குறுதிகளை மட்டும் அளிக்கிறது, செயல்வடிவம் இல்லை, இப்படியான புகார்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் வரக்கூடும். தவிப்பது மனிதர்களே. அவர்களின் நிறம் இதில் எந்த அளவுக்கு அவசியமாகிறது தெரியவில்லை. (more…)

பொதுSeptember 5, 2005 6:44 pm

அப்பாக்களுக்கு மகள் என்ற ஸ்தானத்தில் பெண் அடி வைப்பது இரண்டாம் அல்லது மூன்றாம் தடவையாக இருக்கும். அந்த வயதில் பெண்ணைப் பற்றிய ஒரு முழு நிர்மானம் மனதிற்குள் உருவாகியிருக்கும். அம்மாவில் துவங்கி அக்காவோ,தங்கையோ வாய்த்த பின், சற்றே நிதானமான சூழலில் ஒரு ஆண்மகனுக்கு பெண் வாய்க்குபோது, அதை பேணுவதில் தகப்பனைத் தவிர சிறந்த ஆள் வேறு யாராகவும் இருக்க இயலாது. (more…)

பொது 2:49 pm

Laptop

நம்ம நீண்ட நாள் கனவு இது, இல்லீங்க வெறும் லாப்டாப் மட்டும் தான், ஏற்கனவே நான் வேலை பாக்குற யடத்துல அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு பேச்சு, இவன் வேல பாக்கறான்னா இல்ல ப்ளாக்ஸ் படிக்குறான்னான்னு. இருபத்திநாலு மணிநேரமுமும் இணையம் நம்ம பக்க இருந்துட்டு சோறு தண்ணி வேண்டாம், இந்த லட்சண்த்தில வீட்டுக்கு ஒடிடலாமுன்னு ஒரு யோசன, ஆனா இந்த பாழாப் போன இணையம் திருச்சி மாநகரத்துல எப்படி வேல செய்யுமுன்னு ஒரு கிறக்கம். (more…)

பொதுAugust 29, 2005 4:33 pm

இன்று மதியம் மூன்று மணியளவில் அவர் பதிவு ஒன்று பதிப்பபட்டதாக ப்ளாக்லைன்ஸ் தெரிவிக்க விஜயநகரம் சென்றேன். பாலா என்ற நண்பர் அவருக்கு பதிலாக அந்த அதிர்ச்சி தகவலை பதித்திருந்தார். உடனே அவர் பெங்களுர் நண்பர்கள் சிலர் பேருக்கு மடல் செய்தேன். சோடா பாட்டில் பாலாவிடம் இருந்து பதில் வந்தது. அவர் சாதிக் என்ற நண்பரின் செல்பேசச்சொன்னார். சாதிக்கும் அண்ணா பல்கலை கழக மாணவர் தான். நடந்தது இதுவே. (more…)

பொது 2:07 pm

vijayanagar karthik

பல பேருக்கு தெரிந்தவர், வலைப்பூவின் ஆசிரியர் , டெல் நிறுவனத்தின் ஊழியர் , வருங்கால எழுத்தாளர், பொன்னியின் செல்வர் இப்போது இல்லை. கடந்த வெள்ளியன்று விபத்து அடிப்பட்டு …..

யாருமே வலைப்பதிவுல இதுதான் கடைசி பதிவுன்னு எதையும் போடத்தில்லன்னு நினைக்கிறேன். நிகழ்ந்தே விட்டது.

நல்ல வரலாற்று எழுத்தாளராக வளர வேண்டியவரின் வாழ்க்கை அவசரமாக முடிக்கப்பட்டு விட்டது.

அன்னாரை பிரிந்து வாடும் அனைத்து உள்ளங்களுக்குமு எமது ஆழ்ந்த வருத்தங்கள் கண்ணீருடன்

அவரின் கடைசி பதிவு

பொதுAugust 28, 2005 6:03 am

Click Here

சீனாவுக்கு சரி என படுவது வங்காளத்து அபத்தமாம். இதில் வெட்கக் கேடு என்னவெனில் , கடந்த காலத்தை மறந்து கம்யூனிஸ்டுகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாம். புழுதி கூட்டத்தில் இருந்து கொண்டு சட்டை அழுக்காகிறது என்று கதறகிறார் புத்ததேவ். இவர்கள் பேசாமல் சீன குடியுரிமை வாங்கி கொள்ளலாம்.

பொதுAugust 24, 2005 11:15 am

ego

சுடச்சுட வருது இந்த ரிப்போர்ட். வழக்கமா ஆரிய பவன்ல வெஜ் புலாவ் சாப்பிடர நா இன்னிக்கி பராத்தா ஆர்டர் பண்ணினேன். கூடவே ஆலு கரி வேற, எக்ஸ்ட்ரா கரி ஆர்டர் பண்ண வேண்டாமா? நல்லது சாமி, இனி தெனைக்கும் இதுதான் நமக்கு மதிய உணவு. சரி தலைப்ப பத்தி ஆரம்பிக்கிறேன் (more…)

பொதுAugust 23, 2005 4:41 am

அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
முதல் சீன் பாத்த மாதிரி இருக்குங்க
அஞ்சு நிமிஷத்துக்கு அஞ்ச அஞ்ச தடவ அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
முதல் அஞ்சு நிமிஷம் பாத்த மாதிரி இருக்குங்க
எப்பவும் எல்லாரும் அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
தாஸ் படம் பாத்த மாதிரி இருக்குங்க

பொதுAugust 19, 2005 10:50 am

ஒரு நிமிடமா ஒரு நிமிடமா
அன்பே அன்பே

ஆமா இதோ வந்துட்டேன் இன்னும் நாலு மாசந்தான் இருக்கு, அது வரைக்கும் வெயிட் பண்ணு.

பூமியின் சுழற்சியைக் கொண்டுதான் நமது கடிகாரம் ஒடுகிறது என்றாலும் அதை கண்காணிக்க அடாமிக் க்ளாக் வைத்திருக்கிறார்கள். சில சமயம்
விண்வெளியில் வினோத நிகழ்வுகளால் மாறுபட்டால் இவை இரண்டும் மாறுபட்டு நிற்கும். அப்போது நம்ம அடாமிக் அண்ணாச்சி முழித்து கொண்டு ஒன்றோ இரண்டோ நிமிடம் தன்னை அட்ஜெஸ்ட செய்து கொள்வார். இது நிகழும் நேரம் இவ்வருட கடைசியில் நள்ளிரவில். காரணம் பூமி மெதுவா சுத்துதான். பால் குடிக்கும் பிள்ளைகள் தவிர உறங்காது கண் விழித்து புது வருடத்தை வரவேற்கும் என்னை மாதிரி அப்பிராணிகள், ஒரு நிமிடம் வீணாவதை நினைக்காமல் , இந்த அரிய மாற்றத்தை உன்னிப்பாக கவனிக்கவும்.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்கவும்

பொதுJuly 30, 2005 8:46 am

பத்தாவதா ஒரு கிரகம் கண்டுபிடிச்சிருக்காங்க மக்கா. அது கிரக குடும்பத்தில் ஓரு மெம்பர்தானா ? தெரியலா விவாதம் நடந்துகிட்டு இருக்கு. விவாதம் நல்லபடி முடிஞ்சா கண்டிப்பா அனுபல்லவில பதிவு வரும். அதனால புக்மார்க் பண்ணிடுங்க

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்கவும் .