பொது, இணையம்September 27, 2005 4:06 pm

internet

போதும், போதும் எதுக்கும் ஒரு அளவிருக்கு. கூகிளின் தற்போதைய மந்திரம் இதுதான். இனி தாங்கள் பட்டியலிடும் வலைத்தளங்களின் எண்ணிக்கையை முகப்பில் வெளியிட மாட்டார்களாம். அதாவது தேடுயந்திரத்தில் புது தளங்கள் அவ்வளவு எளிதாக சேர்க்கப்பட பட மாட்டாது. போதுமான அளவிற்கு தேடுயந்திரத்தில் தளங்கள் திரட்டப்படுவதால் (more…)

இணையம்July 31, 2005 10:40 am

தேடு பொறி களம் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. மைக்ரோஸாபட் நிறுவனத்தை சேர்ந்த கை பு லீ என்பவர் தேடுபொறிநுட்பத்தில் கைத் தேர்ந்தவர். இவர் அந்நிறுவனத்தை விட்டு கூகிளிடம் சென்றதால் மைக்ரோஸாபட் இவர் மீதும் ,கூகிள் மீதும் வழக்கு தொடுத்துள்ளது.இவர் ஓப்பந்த மிறுதல் செய்தாகவும் , போட்டி நிறுவனத்திற்கு ரகசியங்கள் பரிமாறும் வாய்ப்புள்ளதாக அஞ்சுவதாகவும் , மைக்ரோஸாபட் கவலைப்படுகிறது.

ஜ.டி.யைப் பொறுத்த வரை போட்டி நிறுவனங்கள் சிறந்த வேலையாடகளை தங்கள் வசம் கவர்வது புதிதில்லை என்றாலும் ,இப்பிரச்சனை கோர்ட் வரை சென்றிருப்பது இதுவே முதல் முறை. இதன் பிண்ணணியில் மைக்ரோஸாப்ட் வெளியிட்டுள்ள இணைய உலாவியில் (Internet explorer) , கூகிள் மற்றும் யாஹூவின் தேடுபொறி வசதி அகற்றப்பட்டு , எம்.எஸ்.என் மட்டும் டிபால்டாக அமைந்துள்ளது.