கவிதை, TamilMarch 24, 2006 8:23 pm

ஆவலாய் பயத்துடன்
தடையில்லாத பாதை நோக்கி
கற்களின் கூர்மையில் அடிபடாமலும்
குழிகளின் ஆழத்தில் தொலைக்காமலும்

புதிய வியூகங்கள்
புதிய விதிமுறைகள்
அனுபவ நேர்த்திக்கு வழுக்கையும்
அடிப்பட்டே மழுங்கிய ஆர்வமும்
வாழ்க்கை சுழலும்
சக்கரங்களின் வேர்வையில்

கவிதை, TamilNovember 7, 2005 5:43 pm

just nothing

எதாவது எழுதணும்
நேரமிருக்கு நிதானமிருக்கு
எதாவது கிறுக்கணும்
விஷயமிருக்கு வில்லங்கம் இருக்கு
எதாவது சொல்லணும்
களமும் இருக்கு கருத்தும் இருக்கு
எதாவது பதியணும்
‘ம்’மும் உண்டு ‘ம்.ஹும்’ உண்டு

கவிதைOctober 14, 2005 12:34 pm

நேராகவோ வளைந்தோ
கிறுக்கும் நெடுக்கமாக
நீண்டபடி
அடைத்தும் அணைத்தும்
குட்டையும் நெட்டையுமாக
கழிந்த நிமிஷங்களை எண்ணிக்கொண்டும்
கடக்க வேண்டிய எண்ணிக்கைகளில்
அவரச அவஸ்தையாய் அரட்டையடித்த படி
பாலரும் பண்டிதரும்
பெண்களும் பெரிசுகளும்
சீராய் நிற்க
வரிசைகள் பலவிதம்

கவிதைOctober 10, 2005 3:40 pm

citytraffic
வலது திருப்பங்கள் யூ-டர்ன் ஆவதும்
வராமல் வந்தும் நகராமல் ஊர்ந்திடும் பேருந்துகளும்
புற்றீசலாய் சாலை முற்றும் சான்ரோட்களும்
புதிதாய் வந்திறங்கிய ஹோண்டா கார்ன்னும்
நடைப்பாதையின் ஓரம் தனக்காய் எண்ணும் பல்சரும்
புதிதாய் சுவாசிக்க ஒன்றுமில்லை மாநகரத்தில்

கவிதைSeptember 21, 2005 6:15 pm

chase

விட்டதாய் நினைத்து
விடாமல் துரத்தப்படுகிறேன்
போதும் என்றாலும்
புதிராய் கேள்விகள்
வேண்டாம் என்பினும்
விழுதாய் கிளைகள்
தந்துவிட்டதாய் நினைவு
கழித்துவிட்டதாய் ஒப்பந்தம்
சில்லறைகள் கரைந்தன
பைகள் நிரம்பின
வழங்கவே இன்னும்
புழக்கத்தில் மனம்

கவிதைSeptember 11, 2005 4:35 am

change

முன்னந்தலை ஏறிய சலூன் அண்ணா
முதலாய் திருடிய டீலக்ஸ் கடை கடலை மிட்டாய்
புல் முளைத்த விளையாட்டு மைதானம்
கத்து கத்தாய் கப்பல் விட்ட கால்வாய்
மளிகை கடைக்கு மாறிய டீக்கடை
சின்ன சின்ன மாற்றங்கள்
சித்திரம் வரை அல்லது சிந்தையில் வை
சீக்கிரம் நான் சிதிலம் ஆகும் முன்

கவிதைAugust 26, 2005 5:22 pm

பார்கவும் வேண்டாம்
கேட்கவும் மாட்டேன்
வாங்கிடலாம் - தொட்டு விடும் தூரம்
வச பாட வசதிதான் பாவம்
முடியாத ப்ரசனை - சுற்றும் முட்கள்
இலைகளின் வேதனை
பரிவர்த்தனை பரிபாஷை
பாந்தாமாய் பாரங்கள்

கவிதைAugust 22, 2005 4:12 pm

படபடத்தது கண்கள்
படர்ந்தன வானெங்கும்
உயர்ந்தன புருவங்கள்

எல்லாம் சுருள் சுருளாக
இருக்கட்டும் என் பங்காக

நகைக்க ஒன்று
புகைக்க இணங்கு

பார்வை பழுது
பாவம் விழுது

பருவ கோளாறு
பலன் இராது

கவிதைAugust 20, 2005 5:27 pm

Darwinism

பத்து போதும் என்றார்கள் விளையாட்டை நிறுத்தினான்
பன்னிரெண்டு வேண்டும் என்றார்கள் பொறுமை காத்தான்
நாலே வருடம் நறுக்கென முடியும்
இருக்கட்டும் இதுவும்
இதற்கும் தலையசைத்தான்

பணிவாய் நடப்பாய் பலதும் கற்பாய்
படிகள் பலவும் விரைவாய் கடப்பாய்
உனதே உலகம் பொறுப்பாய் தலைவா

கலி முத்தியது காயும்
அம்மா இன்னும் என்ன?

பொறு மகனே - பொறுக்கனும்

போடங்கடா நீங்களும் உங்க டார்வினிஸமும்

கவிதைAugust 18, 2005 4:26 pm

பார்த்து ரசிக்கிறேன்
படிக்க அலைகிறேன்
பிடித்ததை சேமிக்கிறேன்

எண்ணங்களை கோர்க்கிறேன்
எழுத விழைகிறேன்
அயர்ந்து விடுகிறேன்

இன்றும் ஒருமுறை

கவிதைAugust 10, 2005 5:44 pm

Clock

சூரியன் ஆறு மணிக்காம்
குளியல் ஏழாம்
செல்வாய் எட்டு

உறங்கியது பதி ஒன்று
உண்டது பத்து
வந்தது ஒன்பது விழித்ததும்

கவிதைAugust 9, 2005 3:55 pm


எல்லாம் நடக்கிறது
படிப்பதும் பதிவதும்

திரட்டினாற் அறநூறு
வளர்ந்திடும் நிதம் நூறு

தீராமல் காலசுவட்டில்
கணையில் ஆழ்ந்து

இலக்கின்றி தேடினேன்
வலைப்பதிக்கிறேன்

கவிதை 9:38 am


மதிய நேரங்களில் தூங்கியும்
மற்ற நேரங்களில் சாப்பிட்டும்
மாலையில் மெல்ல வீதி வழியே

சின்னதாய் மாற்றங்கள்
நுணுக்கமாய்

தூக்கத்திற்கு மூன்று
சாப்பிட இரண்டு
வலம் வர ஒன்று
இருபத்திரண்டை இரண்டு நாட்களில் நிரப்ப முயல்கிறேன்

கவிதைAugust 5, 2005 11:38 am

முடிவுற்றாலும் மறக்கவில்லை
முறிந்தாலும் மறந்தில்லை
மறைத்து வைக்கிறேன் உன்னோடு உறவாய்
உறைவிலிருக்கும் வாளாய்

கவிதைJuly 28, 2005 2:53 pm

நல்ல பொருள் தேடி
நான்கைந்து பதிவுகள் ஒடி
நம்பிக்கை இழந்தது கவிதை

மொழிக்கும் நிறமுண்டாம்
விவாதப்போம் வாரீர்
தமிழுக்கும் ஜாதியுண்டாம்
வாதிடுவோம் வாரீர்
அனர்த்தமும் அர்த்தமாம்
சேறிடுவீர் வாரி


நாராயணன் வெங்கிட்டு
கவிதை போட்டியில் இடம் பெறாத கவிதை :(