மதுரையைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் அயராத உழைப்பு, உந்ததல் மூலம் தன்னார்வ நிறுவனம் ஓன்றைத் தொடங்கியுள்ளார். அவரின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மதுரையைப் பொறுத்த வரை , எனக்கு பலவிதபட்ட அபிப்ராயங்கள் உண்டு. மருத்தவ கல்லூரி மாணவர் ஓருவர் இப்படி அந்நகரத்தைப் பற்றி கூறுகிறார். “Its a developed village”. இது மதுரை நண்பர்களை காயப்படுத்தாலும் , ஆனால் இது உண்மைக்கு வெகு அருகில் உள்ள கூற்று.
நான் அடியோடு வெறுக்கும் விஷயம் , இங்கு நடக்கும் அரசியல் சண்டைகள். தமிழ் தமிழ் என்று மொழிக்கு கடவுள் அந்தஸ்தைக் கொடுத்து தினமும் பூஜை நடத்தவது.
உணர்ச்சிவசப்படுவது, வெட்டு குத்து என்று இளைஞர்கள் அலைவது. இவை மீடியாக்களின் வெளிப்பாடாக இருக்கலாம். நண்பரின் முயற்சியால் இவை நிவர்த்தி செய்யும் முதல் கட்டுமாக எண்ணுகிறேன்.
