அனுபல்லவி
	<language>en</language>
ரஜினி வழியை விஜய் பின்பற்ற வேண்டும் - செய்தி விமர்சனம்
		<description>	தொடர் தோல்வியை சந்தித்து வரும் விஜய்க்கு இது செக்மேட் காலம்.  தளபதி என்கிற சிம்மாசனம்  விநியோகஸ்தர்களால் கட்டப்பட்டது , காப்பாற்ற சந்திரசேகரை அழைத்தால் பரவாயில்லை. அரசியல் நோக்கி போகிறேன் என்ற பிரம்மாஸ்திரம் விடுவது விடலை குஞ்சுகளை உசுப்பேற்றும், ‘ஆதி’களை விற்க உதவாது. 
	ரசிக மணிகளால் சூழ்ந்த வலைபின்னல் தான், புரட்சி ஸ்டார், சூப்பர் தலைவர்  எல்லாமே.  சற்று உற்று நோக்கினால் அதில் பணம் என்கிற ...</description>
பழையன கழிதலும் புதியன் புகுதலும்
		<description>	அடுத்த வருடம் வருவதற்கு இன்னும் முன்னூறு சொச்ச நாட்கள்  இருந்தாலும் , புது வருட தீர்மானமாக ஏதாவது எழுதியாகணும்.
	நிறைய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் விதமாக சந்தோஷங்களும் துக்கங்களும் நிரம்பிய வருடம். 
	நான் அப்பாவானதும் , அதற்கு சிறிதும் பிரயதனபடாமல் ,மனைவியை வேதனைக்குள்ளாக்கி ,என்னால் குடுக்க முடிந்த அருகாமை என்ற ஓன்றுக்காக  மட்டும் திருச்சிக்கும் பெங்களுருக்கும் அலைந்தது புதிது.  நிதானத்தை இழந்து தவறிழைத்து பின்பு வருத்தப்பட்டது எல்லாமே ஓரு ...</description>
Movies, a meme
		<description>	இந்த வெள்ளோட்டத்தில் என்னையும் இணைத்து கொள்கிறேன்.
	1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
    சகல கலா வல்லவன் வந்த சமயம்.
	2. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
   சூப்பர் ஸ்டாரின் ‘சிவா’. நினைவு சின்னம் மற்றும் மை டியர் குட்டி சாத்தான் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்க இதற்கு தான் டிக்கெட் கிடைத்தது.
	3. என்ன உணர்ந்தீர்கள்?
      டைட்டில் கார்டு ...</description>
இடைசொருகல்
		<description>	யூ ஆர் அனந்தமூர்த்தி பினத்தலில் இருந்து ஒரு முத்து?  ” மசூதிகள் மற்றும் கோவில்கள் , தீவிரவாதம் புனையும் இடமாக மாறி வருவதை கண்டு, மனம் புண்படுகிறது ”
	இப்படி தான் இடைசொருகலில் பொய்களை விதைக்கப்பபடுகின்றன. 
அவியல்
		<description>	எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டாலும் , அந்த ஆசை இன்னும் விடவில்லை. எப்படியாவது ரெண்டு வரி , படிக்கிற மாதிரி இருந்தா சந்தோஷம். 
	சமிபத்திய வெடிகுண்டு நிகழ்வுகள் எதுவும் நல்லத்துக்கு என்று தோனுது.   வெகுளித்தனம் என்பது என் அடுப்பங்கரை வரை தான் , என் அடி வயிரை தொட்டால், என்று மக்கள் உணரும் வரை , இந்த திருவிழா தொரட்டும்.
	  கடந்த முன்று மாதங்களாக ...</description>
This atleast keeps my blog alive
இன்னும் ஒரு சரணம் - 1
		<description>	இந்த பாடலுக்கு மூன்றாவது சரணம் இருந்தால். இதோ என் கற்பனை முழுப்பாடலுடன். 
	மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமேனடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
	மின்னலே என் வானம் உன்னை தேடுதே…
	கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிபோன சில்லில் எல்லாம் ...</description>
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
		<description>	நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
	நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையே
	பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
	விழியில் விழும் தூசி தன்னை அவள் எடுக்க நீ  இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ ...</description>
பெல் கானம்
		<description>	மாசாமாசம் நான் படியேறும் இசைக்கோயில். இளையராஜாவின் பாந்தமான முகமும், மைக்கேல் ஜாக்ஸ்சனின் கத்திரி முடியும் ஒருங்கே காட்சிச்தரும் உற்சவத் தேரோட்டம். 
	இது என்ன பாட்டு ஜிக்கு புக்கு ரெயிலு ஒண்ணுமே புரியல, இங்கிலீஷ் பாட்டு மாரி இருக்கு. 
	இது மைக்கேல் ஜாக்ஸ்சன் சரி , அது யார் ஜானட்?
	எவ்வளவு தடவ சொல்றது கடைசிலே இங்கிலீஷ் போடாதீங்க, கேப் இருந்தா பரவால்ல.
	எத்தன கேஸட் போட்டாலும் தீராது ,மொட்ட மொட்டதான்.
	பாக்கெட் மணி இல்லாட்டாலும் ...</description>
யதார்(தத்)துவங்கள்
		<description>	உனக்கென பிறந்தது உனக்கேதான்
கிடைச்சத வைச்சுக்கோ அவ்வளவு தான்
நடப்பதுதான் நடப்பதுதான் - உண்மை
விடியும் பார் விடியும் பார்
	மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
	நீ விரும்பற பொண்ண விட உன்ன விரும்பற பொண்ண காதலி. வாழ்க்கை நல்லாயிருக்கும்.
	காதல் என்பது எது வரை கல்யாணம் காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எது வரை  கழுத்தினில் தாலி விழும் வரை
சித்திரமும் கைப்பழக்கம், எந்தமிழும் பளாக் பக்கம்
நிஜமாகவே மறந்து போய்டுமோன்னு பயமா இருக்கு. பழைய பதிவுகளை பாத்ததுக்கப்புறம் ஒரு தெம்பு. அட நாம கிறுக்கனாதா இதுன்னு ஒரு கிளுகிளுப்பு. இந்த சாக்குல ஒரு பதிவு ரெடி. 
	தொடர்ந்து எழுதாததற்கு காரணம் கம்பெனி மாறுனது தான். என்னோட தமிழ் தரவுகள் எல்லாம் காலி. முரசு ப்ள்க்கின் நோட்பேடில் ஏனோ வேலை செய்ய மறுக்கிறது. சுரதா கொஞ்ஞூண்டு படுத்தியது. 
	இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாத்தித்யனுக்காக இந்த புது டூல். புது ...</description>
சக்கரங்களின் வேர்வையில் சுழலும் வாழ்க்கை
		<description>	ஆவலாய் பயத்துடன்
தடையில்லாத பாதை  நோக்கி
கற்களின் கூர்மையில் அடிபடாமலும்
குழிகளின் ஆழத்தில் தொலைக்காமலும்
	புதிய வியூகங்கள்
புதிய விதிமுறைகள்
அனுபவ நேர்த்திக்கு வழுக்கையும்
அடிப்பட்டே மழுங்கிய ஆர்வமும்
வாழ்க்கை சுழலும்
சக்கரங்களின் வேர்வையில்
கிச்சடி (ஊசிப்போன)
		<description>	சக வேலையாளிடம் என்ன நைட்டு ஊருக்கான்னு கேட்டப்ப இன்னிக்கு திங்களுன்னு படல. இப்பவே வாரயிறுதி வந்துட்டதாக ஒரு பிரமை. நம்ம சகா HPல வேல செய்யுறான். அவனுக்கு இந்த வாரம் முழுசும் லீவு. இது HPயில வருஷா வருஷம் நடக்கும் விடுமுறை திருவிழா. நமக்குதான் கொடுத்து வக்கலே. ஹும் இருந்தாலும் வெட்டி முறிக்க எதுவும் இல்லாததால கடந்த வருஷத்த திருப்பி பாக்கறது நல்லதுன்னு தோனுது.
	ராஜ்தீப் சர்தேசாய்க்கு ஜ.பி.என், நமக்கு சமையல். ...</description>
Millers 46
	மேலே கூறிய சொற்களை கூகிளியதால் இரண்டு சுட்டி கிடைத்தது. ஒன்று ஹிந்து நாளிதழில் இந்த ரெஸ்டாரென்டைப் பற்றிய அறிமுகம் , இன்னொன்று அனிதா போராவின் அங்கலாப்பு. இதப்போய் ஏன் தேடினாய் அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு விளங்குது, ஆனா பாருங்க பசின்னா  நமக்கு , பக்கத்துல எதாவது கவர்ச்சியா போட்டுருந்தா உள்ள நுழைஞ்சுடுவேன். ஆனா ஆபிஸ விட்டு பத்தடி நடந்தோன்னதான் ஞாபகம் வருது பணமில்லன்னு. பணமில்லாட்டி என்ன கடன் ...</description>
கொக்கரக்கோ கும்மாங்கோ
		<description>	ரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியாத்தான் போகும்.
	செல்லுல balance இல்லனா கால் பண்ண முடியாது, ஆனா… மனுஷனுக்கு கால் இல்லன்னா balance பண்ண முடியாது.
	பஸ் போய்ட்டா பஸ் stand அங்கயே தான் இருக்கும் , ஆனா சைக்கிள் போய்ட்டா சைக்கிள் stand கூடவே வரும்.
	Filesன்னா ஒக்காந்து பாக்கணும் ,ஆனா Pilesன்னா பாத்து ஒக்காரணும்.
	கட்டில் ஒடஞ்சா படுக்க முடியாது, கண்ணாடி ஒடஞ்சா பாக்க முடியாது, ஆனா முட்டை ஒடஞ்சா ...</description>
சென்னையில் ஒரு நாள்
என்னதான் மூன்று வருடத்திற்கு மேல் புழங்கிய ஊராக இருந்தாலும் அன்னியமாக பட்டது சென்னை. 14 மணி நேரம் பயண களைப்பு கத்தி பாறை சிக்னலில் மறைந்தது. நேரு மாமாவும் மறைந்திருந்தார் ஒரு பாலத்திற்காக. ஊர் சுற்ற ஏதுவாக மவுண்ட ரோடு செல்லும் பஸ் ஒன்றில் தொத்திக்கொண்டேன். மாற்றங்கள் பெரிதாக நிகழவில்லை என்பதில் உள்ளுக்குள்ளே குரூர மகிழ்ச்சி. மறந்த பஸ் நம்பர்கள் சட்டென நினைவுக்கு வந்தன. ரொம்பவும் படுத்தியது D70. கடந்த ...</description>
60வது சந்தோஷ் டிராபி 2005
	கடந்த முறை கோப்பையைத் தட்டிச் சென்ற கேரளா இந்த ஆண்டு கொச்சி,திருவனந்தபுரம், கோழிகோட்டிலும் நடத்துகிறது. இப்போட்டிகளை  ஜி.டி.வி. ஒளிபரப்புவது இன்னொரு சிறப்பு அம்சம்.  லீக் ஆட்டங்கள் முடிந்தவடைந்து விட்டன. இனி கால் இறுதி லீக் முறையிலும், அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நாக் அவுட் முறையிலும் நடைபெறும். இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்போட்டியை ஸ்பான்ஸர் செய்ய இசைந்துள்ளது.  For fixtures click here.
‘!’வும் கிடைக்கும் ‘?’வும் கிடைக்கும்
	எதாவது எழுதணும்
நேரமிருக்கு நிதானமிருக்கு
எதாவது கிறுக்கணும்
விஷயமிருக்கு வில்லங்கம் இருக்கு
எதாவது சொல்லணும்
களமும் இருக்கு கருத்தும் இருக்கு
எதாவது பதியணும்
‘ம்’மும் உண்டு ‘ம்.ஹும்’ உண்டு
புஷ்வாணம் மற்றும் பாரிஸ் சரம்
		<description>	என்னடா ‘long time no see’ யாரும் சொல்லிர கூடாதுங்கிறதுக்காக இந்த பதிவு. தலைவருக்கு நிலம சரியில்லை. மத்தளதுக்கு இரண்டு பக்க இடிங்கிறது மாதிரி ஆளாகுக்கு குத்து விட புஷ் இப்ப தன்னோட பாதையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த வார டைம் பத்திரிக்கையில் விளக்கமாக அலசியிருக்கிறார்கள். மேலும் குசும்பன் மற்றும் ஸ்ரீகாந்த் பதிவுகள்.
	தங்களைத்தான் தேடுகிறார்கள் என்று தவறாக எண்ணி ஓடிய இரண்டு நார்த் ஆப்பிரிக்கா வந்தேறிகள் ...</description>
Overt v/s Covert advertising
	பத்து ரூபாயில் வண்ண வண்ண உடைகளில் வகை வகையாய் சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள்,  அரட்டை அரங்கிகளின் அப்பளம், அடுத்த வீடு, அவ்வளவு தான், உன் மூக்கின் மணமென்ன கேள்வி - பதில் பகுதி, ஆண்கள் பள்ளியில் அகப்பட்ட முன் பெஞ்ச் சோட புட்டி மாணவர்களின் புண்ணிய சொற்கள், இவைகளுக்கு நடுவில் உள்ளாடை மற்றும் சேலை விளம்பரங்கள். இது Overt.
எண்பது ரூபாயில் ‘குலுங்கியது காஷ்மீர், துவண்டது நம்பிக்கை‘ கவர் ஸ்டோரி, ...</description>
நகர் உலா
	நீர் வரத்து குறைந்திருந்தாலும் சிறுவர்களின் குதூகலத்துக்கு குறைவில்லாமல் , சிறு சிறு மணல் மேடுகளுக்கு நடுவில் காவிரி. இதை ரசிக்க கரண்ட் இல்லாத ஒரு ஞாயிறுக்கிழமையும்  அது இல்லாமல் இயங்காத தொலைக்காட்சியும் தேவையாயிருந்தது. அப்படியே நகரத்தையும் சற்று பார்க்கலாமென்ற ஆசை சற்று நியாமாக பட்டதால் வீர்ரென்றேன். எங்கெங்கும் பார்கினும் போஸ்டர்கள், புதிதாக துவங்கப்பட்ட கட்சிக்கு பத்தாம் ஆண்டு துவக்க விழா, சிலரை வானளவு புகழ்ந்தோ , சிலரை ...</description>
வரிசைகள் பலவிதம்
	நேராகவோ வளைந்தோ
கிறுக்கும் நெடுக்கமாக
நீண்டபடி
அடைத்தும் அணைத்தும்
குட்டையும் நெட்டையுமாக
கழிந்த நிமிஷங்களை எண்ணிக்கொண்டும்
கடக்க வேண்டிய எண்ணிக்கைகளில்
அவரச அவஸ்தையாய் அரட்டையடித்த படி
பாலரும் பண்டிதரும்
பெண்களும் பெரிசுகளும்
சீராய் நிற்க
வரிசைகள் பலவிதம்
புதிதாய் ஒன்றுமில்லை
வலது திருப்பங்கள் யூ-டர்ன் ஆவதும்
வராமல் வந்தும் நகராமல் ஊர்ந்திடும் பேருந்துகளும்
புற்றீசலாய் சாலை முற்றும் சான்ரோட்களும்
புதிதாய் வந்திறங்கிய ஹோண்டா கார்ன்னும்
நடைப்பாதையின் ஓரம் தனக்காய் எண்ணும் பல்சரும்
புதிதாய் சுவாசிக்க ஒன்றுமில்லை மாநகரத்தில்
ம் பாக்கலாம்
	அடுத்ததா சிலப்பதிகாரமா மணிமேகலையான்னு யோசிச்சு மாசம் ஒண்ணாச்சு. நாமெல்லாம் எழுதவே ஆரம்பிச்சிருக்க வேணாமோ? பெருந்தலைகளோட படைப்புகள் படிக்க படிக்க பேனா ஸாரி கணிணி பக்கம் வரதான்னு மனசு குறுகுறுக்குது. படைப்புலகில் வார்த்தைகளை வடிக்கும் விதமும், காட்சிகளை விவரிக்கும் பாங்கும் இருக்க எவ்வாறு வேண்டுமென்பதை ஒவ்வொரு வரிகளிலும் தெளித்து விட்டு சென்றிருக்கிறார்கள். புதுப்புது உலகத்தை ஒவ்வொரு படைப்பிலும் வரைந்து விட்டு செல்கிறார்கள். 
	ஒருத்தர் சொல்றார்,’என் எழுத்து அனிச்சை செயலுன்னு,அதை விமர்சிக்காதீர்கள்‘. ...</description>
இணையமும் அது விட்டு செல்லும் அடையாளமும் - 1
	போதும், போதும் எதுக்கும் ஒரு அளவிருக்கு. கூகிளின் தற்போதைய மந்திரம் இதுதான். இனி தாங்கள் பட்டியலிடும் வலைத்தளங்களின் எண்ணிக்கையை முகப்பில் வெளியிட மாட்டார்களாம். அதாவது தேடுயந்திரத்தில் புது தளங்கள் அவ்வளவு எளிதாக சேர்க்கப்பட பட மாட்டாது. போதுமான அளவிற்கு தேடுயந்திரத்தில் தளங்கள் திரட்டப்படுவதால்  இந்த முடிவை எடுத்துள்ளார்கள். 
	 கூகிளின் அனுமுறை ரொம்ப சிம்பிள். தேடும் சொல்லுக்கும்,க்ளிக்கும் தளங்களுக்கும் தகுந்தாற் போல் பக்க குறியை (page rank) எனும் ...</description>
விடாமல்
	விட்டதாய் நினைத்து
விடாமல் துரத்தப்படுகிறேன்
போதும் என்றாலும்
புதிராய் கேள்விகள்
வேண்டாம் என்பினும்
விழுதாய் கிளைகள்
தந்துவிட்டதாய் நினைவு
கழித்துவிட்டதாய் ஒப்பந்தம்
சில்லறைகள் கரைந்தன
பைகள் நிரம்பின
வழங்கவே இன்னும்
புழக்கத்தில் மனம்
கிரிக்கெட்டும் விளம்பரங்களும் - 2
	Cricket got better with live relay. நேரடி ஒளிபரப்பு கிரிக்கெட்டை பல மடங்கு உயர்த்தியது. இந்தியா  பாகிஸ்தான் போட்டிகள் தீபாவளி ரீலிஸ் படங்கள் போல் பரபரப்பாயின. கிரிக்கெட் வெறியர்கள் மைதானத்தை விடுத்து தொலைக்காட்சிப்பெட்டி முன் கூடினர். மட்டையாளர்களுக்கும், பந்து வீச்சாளர்களுக்கும் இலவச ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஓவர் முடிந்தபின்னும் தீவிர அலசல் நடந்தது. விளம்பர இடைவேளை இதற்கு தோதுபட்டது. ஒளியும் ஒலியும் விளம்பரங்கள் தூற்றியவர்கள் இதை சகித்தனர். ...</description>
கிரிக்கெட்டும் விளம்பரங்களும் - 1
	எனக்கும் கிரிக்கெட்டுக்கும் என்றுமே ஏழாம் பொருத்தம் தான். மற்ற விளையாட்டை போலில்லாமல் இதில் நான் சராசரிக்கும் கீழ்.. இதைக் குறித்து எனக்கு எப்போதும் வருத்தமும் இருந்ததில்லை. இதற்கு காரணம் எங்கள் தெருவில் இன்ன விளையாடுவது என்றில்லாமல் புட்பால், ஹாக்கி, பாட்மிட்டன், என்று எதையும் விட்டு வைத்ததில்லை. 
	மைதானம் , விளையாட நண்பர்கள் என்று குறைவில்லாமல் எங்கள் விளையாட்டு சீசன் ஆரம்பிக்கும். பரிட்சை விடுமுறை அன்றே முடிவு கட்டி விடுவோம். ...</description>
அ..ஆவும் ஜேம்ஸும்
	வாராவாரம் தியேட்டர் பக்கம் போயே ஆகணும். சினிமா பைத்தியமில்ல, இருந்தாலும் செய்யரதுக்கு எதுவும் இல்லாததால பாலாஜிக்கு போன் போட்டேன். Best Friend ஒடுது வாங்கன்னாங்க. சரி ஆட்டோவ புடி. அரைமணி நேரம் மிஸ்ஸிங். சரி பரவாயில்லன்னு பாத்தேன். பெரிசா ஒண்ணும் இல்ல விசிலடிறத தவிர.  
	ரஹ்மான் தானோட இசையை யாருக்கு கொடுக்கனும் தெளிவா தெரிஞ்சு வச்சுரது நல்லது. ஒரு மைனஸ் சமன்படுத்த ஒரு ப்ளஸ் வேணும். அதான் ஜேம்ஸ். ...</description>
பேருல என்ன இருக்கு, கண்ணாயிரத்துக்கு ஆயிரம் கண்ணா?
	‘அம்மனுக்கு பச்ச புடவதான்  இல்ல சிவப்புதான். ரெண்டையும் போடரத தானே ஒப்புக்கிட்டோம். இப்ப என்ன தகராறு. பத்து வருசங் கழிச்சு நடக்கர திருவிழா ,இந்த விஷயத்துக்கெல்லாம் ஏய்யா தகராறு பண்ணிறீங்க.’ இப்படி விஜயகுமார் சொல்வதாக ஒரு படம். பேர் நினைவில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சேரன் பாண்டியனை போல் இன்னொரு முத்து.  
	சொல்ல வந்த விஷயமே வேற. என் பேருக்கு முன்னால் இரண்டு இனிசியல். தாத்தா பெயரையும் அப்பா ...</description>
இன்னொன்னா?
	சுப்ரபாதம் சொல்ல , சுபம் சொல்லாம இரவு முட்டும் இடுப்ப காட்ட, சுளுக்கெடுத்தா மருத்தவம் சொல்ல, குண்டு வெடிச்ச ப்ளாஷ் அடிக்க , புடிச்ச பாட்ட கேட்டு முழுசா போட , வந்தாச்சு ஒரு தொலைகாட்சி. கணிப்பொறி நண்பர்கள் என்றும் சொல்லும் வாக்கியம். “மச்சி எல்லாமே காப்பி பேஸ்ட் தான்”. அதே போல தொலைக்காட்சியும் ஆகி விட்டது.
	 காலையும் குறி சொல்ல வேண்டும், மதியம் பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டும், சினிமா ...</description>
சந்தோஷ வானிலே
	விஜய் நடிக்க , செல்வா இயக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசைமைத்து வெளிவந்திருக்க வேண்டிய தெலுங்கு டப் படம்.  ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் புண்ணியத்தில் ஒரு நல்ல படம் என்  ஞாயிற்று கிழமை காலையை ஆக்கிரமித்தது. 
	நாகார்ஜுனா ஊட்டியில் பெரிய ஆர்கிடெக், அவரை காதலிக்கும் கிரேஸி சிங் பெற்றோரை எதிர்த்து கல்யாணம் முடிக்கிறார். ஒரு ஆண் குழந்தைக்கும் தாய் ஆகிறார். விபத்தில் தன் மனைவியை இழக்க நாகார்ஜுனா , அவர் ...</description>
சித்திரமே சிந்தையில் வை
	முன்னந்தலை ஏறிய சலூன் அண்ணா
முதலாய் திருடிய டீலக்ஸ் கடை கடலை மிட்டாய்
புல் முளைத்த விளையாட்டு மைதானம்
கத்து கத்தாய் கப்பல் விட்ட கால்வாய்
மளிகை கடைக்கு மாறிய டீக்கடை
சின்ன சின்ன மாற்றங்கள்
சித்திரம் வரை அல்லது சிந்தையில் வை
சீக்கிரம் நான் சிதிலம் ஆகும் முன்
இல்ல துணைநல ஒப்பந்த விழா
		<description>	சுருக்கமா தமிழ் கல்யாணம்.மாப்பிள்ளையின்  தந்தை கழக பின்ணணி கொண்டவர். நினைவு தெரிந்த நாள் முதல் இவரின் வர்ணங்கள் கறுப்பு, சிவப்பு மட்டுமே. வை.கோ உரை என்றால் கொள்ளை பிரியம். விடுதலை , உண்மை இவர் வீட்டில் தான் நான் முதலில் கண்டது. எழுபதுகளில் இவர் தொடங்கிய கழக முயற்சிகள் எல்லாம் இன்றும் கவனிக்கப்படவில்லை. பேராசியர் அன்பழகன் அடிக்கடி எங்கள் வாதங்களில் தவறாமல் இடம் பெறுவார். திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் ...</description>
இருகுன சேற்றில் சொருகுன கடப்பாறை
	எங்க கேங்குல ஸாலிடா ஆறு பேர். இன்னும் ரெண்டு மூணு பேரையும் சேத்துக்கலாம், ஆனா இந்த ஆறு பேர்தான் பிரதானம், அரட்டை, தண்ணி, பிக்னிக், கம்பென் ஸ்டடி, இப்படி எல்ல கூட்டு சதிக்கும் இந்த ஆறு பேரும் ஆஜர். விஷயம் என்னான்னா இந்த கழுதைகளுக்கு எல்லாம் இப்ப ஏழு,ஏழர வயசாச்சு. அதனால் தங்கள் பேச்சுரிமையை விட தயாராகி விட்டார்கள். ஒருத்தன் கல்யாணத்துக்கு போனா இன்னொரு கல்யானத்துக்கு அறிவிப்பு வரும். நண்பர்களோ, ...</description>
நாட்டாமைகள்
	அந்த சம்பவம் நிகழ்ந்தது பள்ளி பருவத்தில். இனி ஒருவரை ஒருவர் பார்க்க மாட்டோம் என்று உணராத வயது. பத்தாம் வகுப்பு பரிட்சை முடித்தாகவிட்டது. நல்ல வெயில் காயும் ஏப்ரல். கேட்டை தொடும் நேரம் இருவர் கட்டி புரள்கிறார்கள். நபர் ஒன்று என்னோட நெருங்கிய சிநேகிதன், இன்னொருவன் நாட்டாமை. சிநேகிதனின் கோபம் புரியவில்லை. நல்லதானே இருந்தான், என்னடா ஆச்சு இவனுக்கு.  கண்கள் சிவக்க நாட்டாமையை அடிக்க என்னோட மற்றொரு சிநேகிதன். ...</description>
எனக்கு ஹிந்தி தெரியாது, கன்னடத்தில சொல்லு
	இந்த கன்னட தேசத்தில் இப்படி ஒரு வசனம் அதுவும் ரெண்டாவது மொறயா? 
	மொத தடவ ஒரு சிக்னல்கிட்ட. நம்ம மாமாக்கள் டிராபிக்க ஒழுங்கு பண்ண , நம்ம திருவாளர் பொது ஜனம் சகதர்மினியோட வந்து நின்னார் பைக்குல, அதுவும் மஞ்ச கோட்டதாண்டி. மாமா டென்சனாகி கன்னடத்துல கத்த, திருவாளர் “ஹிந்தில சொல்லு, this is india”. மாமா பதிலுக்கு ,” இது கர்நாடகா,கன்னடத்துல தான் சொல்லுவேன், தள்ளி நில்லு” 
	இரண்டாவது ...</description>
கத்ரீனா விடும் சவால்
	இயற்க்கை சீற்றம் கொண்டால் சூறாவளியும் வரலாம் , சுனாமியும் வரலாம். தகுந்த முன்னெச்சரிக்கை இல்லை, மக்கள் இடம்பெயருமாரு எச்சரித்தும் பயனில்லை, நிர்வாகம் வாக்குறுதிகளை மட்டும் அளிக்கிறது, செயல்வடிவம் இல்லை, இப்படியான புகார்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் வரக்கூடும். தவிப்பது மனிதர்களே. அவர்களின் நிறம் இதில் எந்த அளவுக்கு அவசியமாகிறது தெரியவில்லை. நிவாரண பணிகள் வளர்ந்த நாடுகளில் இவ்வாறு தாமதபடுவது சற்று நகைக்க வைக்கிறது, இருப்பினும் இது வெறும் நிர்வாக சிக்கலே என்றும் ...</description>
அப்பனுக்கு பெண் பிடிக்கும்
	அப்பாக்களுக்கு மகள் என்ற ஸ்தானத்தில் பெண் அடி வைப்பது இரண்டாம் அல்லது மூன்றாம் தடவையாக இருக்கும். அந்த வயதில் பெண்ணைப் பற்றிய ஒரு முழு நிர்மானம் மனதிற்குள் உருவாகியிருக்கும். அம்மாவில் துவங்கி அக்காவோ,தங்கையோ வாய்த்த பின், சற்றே நிதானமான சூழலில் ஒரு ஆண்மகனுக்கு பெண் வாய்க்குபோது, அதை பேணுவதில் தகப்பனைத் தவிர சிறந்த ஆள் வேறு யாராகவும் இருக்க இயலாது.
	அன்னையின் உருவத்தை அவன் மகள் மீது பார்கிறான். தான் கடந்து ...</description>
மடிக்கணிணியில் இருந்து முதல் பதிவு
	நம்ம நீண்ட நாள் கனவு இது, இல்லீங்க வெறும் லாப்டாப் மட்டும் தான், ஏற்கனவே நான் வேலை பாக்குற யடத்துல அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு பேச்சு, இவன் வேல பாக்கறான்னா இல்ல ப்ளாக்ஸ் படிக்குறான்னான்னு. இருபத்திநாலு மணிநேரமுமும் இணையம் நம்ம பக்க இருந்துட்டு சோறு தண்ணி வேண்டாம், இந்த லட்சண்த்தில வீட்டுக்கு ஒடிடலாமுன்னு ஒரு யோசன, ஆனா இந்த பாழாப் போன இணையம் திருச்சி மாநகரத்துல எப்படி வேல செய்யுமுன்னு ...</description>
விஜயநகரம் கார்த்திகேயன் - நடந்தது இதுவே
		<description>	இன்று மதியம் மூன்று மணியளவில் அவர் பதிவு ஒன்று பதிப்பபட்டதாக ப்ளாக்லைன்ஸ் தெரிவிக்க விஜயநகரம்  சென்றேன். பாலா என்ற நண்பர் அவருக்கு பதிலாக அந்த அதிர்ச்சி தகவலை பதித்திருந்தார். உடனே அவர் பெங்களுர் நண்பர்கள் சிலர் பேருக்கு மடல் செய்தேன். சோடா பாட்டில் பாலாவிடம் இருந்து பதில் வந்தது. அவர் சாதிக் என்ற நண்பரின் செல்பேசச்சொன்னார். சாதிக்கும் அண்ணா பல்கலை கழக மாணவர் தான். நடந்தது இதுவே.
	வெள்ளியன்று காலை ...</description>
இரங்கல் செய்தி - விஜயநகரம் கார்த்திகேயன்
	பல பேருக்கு தெரிந்தவர், வலைப்பூவின் ஆசிரியர் , டெல் நிறுவனத்தின் ஊழியர் , வருங்கால எழுத்தாளர், பொன்னியின் செல்வர் இப்போது இல்லை. கடந்த வெள்ளியன்று விபத்து அடிப்பட்டு ….. 
	யாருமே வலைப்பதிவுல இதுதான் கடைசி பதிவுன்னு எதையும் போடத்தில்லன்னு நினைக்கிறேன். நிகழ்ந்தே விட்டது. 
	நல்ல வரலாற்று எழுத்தாளராக வளர வேண்டியவரின் வாழ்க்கை அவசரமாக முடிக்கப்பட்டு விட்டது.
	அன்னாரை பிரிந்து வாடும் அனைத்து உள்ளங்களுக்குமு எமது ஆழ்ந்த வருத்தங்கள் கண்ணீருடன்
	அவரின் கடைசி பதிவு ...</description>
ஒரு நாள் ஒரு கனவு
	நிறைய எதிர்பார்க்க வில்லையென்றாலும் கண்ணுக்குள் நிலவு ஏற்படுத்திய ஏமாற்றம் இன்னும் மறையவில்லை. இளையராஜா, ஆனந்த குட்டன்,  பாசில் கூட்டணியில் மற்றுமொரு படைப்பு ஒரு நாள் ஒரு கனவு. 
	நாயகியும் நாயகனும் துடுக்கதனமானவர்கள் அவர்களுக்கே உரிய வகையில். இவர்களின் துடுக்குத்தனம் எதிர்பாராத விதமாக சண்டையில் முடிகிறது. சோனியா பெட் வைக்க ஸ்ரீகாந்த் காதலிக்கிறார். நாயகி பணக்காரியாம், நாயகன் ஏழையாம். 
	தன் குடும்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரும் சோனியாவை வீட்டுக்கு ...</description>
இந்திய கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம்
	சீனாவுக்கு சரி என படுவது வங்காளத்து அபத்தமாம். இதில் வெட்கக் கேடு என்னவெனில் , கடந்த காலத்தை மறந்து கம்யூனிஸ்டுகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாம். புழுதி கூட்டத்தில் இருந்து கொண்டு சட்டை அழுக்காகிறது என்று கதறகிறார் புத்ததேவ்.  இவர்கள் பேசாமல் சீன குடியுரிமை வாங்கி கொள்ளலாம்.
பந்தங்கள்
	பார்கவும் வேண்டாம்
கேட்கவும் மாட்டேன்
வாங்கிடலாம் - தொட்டு விடும் தூரம்
வச பாட வசதிதான் பாவம்
முடியாத ப்ரசனை - சுற்றும் முட்கள்
இலைகளின் வேதனை
பரிவர்த்தனை பரிபாஷை
பாந்தாமாய் பாரங்கள்
இரண்டு பிஸினஸ்மேன் பேசிக் கொள்கிறார்கள்
	சுடச்சுட வருது இந்த ரிப்போர்ட். வழக்கமா ஆரிய பவன்ல வெஜ் புலாவ் சாப்பிடர நா  இன்னிக்கி பராத்தா ஆர்டர் பண்ணினேன். கூடவே ஆலு கரி வேற, எக்ஸ்ட்ரா கரி ஆர்டர் பண்ண வேண்டாமா? நல்லது சாமி, இனி தெனைக்கும் இதுதான் நமக்கு மதிய உணவு. சரி தலைப்ப பத்தி ஆரம்பிக்கிறேன்
	லட்டு ரெடியா?
	ரெடி ஆயுத்து சார்!!
	எல்லாத்தையும் கேன்சல் பண்ணு. புதுசா ஆர்டர் எடு.
	இல்ல முடியாது சார். நேத்தே ஆர்டர் பண்ணது ...</description>
அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
		<description>	அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
முதல் சீன் பாத்த மாதிரி இருக்குங்க
அஞ்சு நிமிஷத்துக்கு அஞ்ச அஞ்ச தடவ அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
முதல் அஞ்சு நிமிஷம் பாத்த மாதிரி இருக்குங்க
எப்பவும் எல்லாரும் அண்ணாச்சின்னு சொன்னா தப்பா?
தாஸ் படம் பாத்த மாதிரி இருக்குங்க 
பா(ர்)வைகள்
	படபடத்தது கண்கள்
படர்ந்தன வானெங்கும்
உயர்ந்தன புருவங்கள் 
	எல்லாம் சுருள் சுருளாக
இருக்கட்டும் என் பங்காக
	நகைக்க ஒன்று
புகைக்க இணங்கு
	பார்வை பழுது
பாவம் விழுது
	பருவ கோளாறு
பலன் இராது
அந்தம் முதல் அந்தம் வரை
	பத்து போதும் என்றார்கள் விளையாட்டை நிறுத்தினான்
பன்னிரெண்டு வேண்டும் என்றார்கள் பொறுமை காத்தான்
நாலே வருடம் நறுக்கென முடியும்
இருக்கட்டும் இதுவும்
இதற்கும் தலையசைத்தான்
	பணிவாய் நடப்பாய் பலதும் கற்பாய்
படிகள் பலவும் விரைவாய் கடப்பாய்
உனதே உலகம் பொறுப்பாய் தலைவா
	கலி முத்தியது காயும்
அம்மா இன்னும் என்ன?
	பொறு  மகனே - பொறுக்கனும்
	போடங்கடா நீங்களும் உங்க டார்வினிஸமும்
ஒரு நிமிடமா ஒரு நிமிடமா
	ஒரு நிமிடமா ஒரு நிமிடமா
அன்பே அன்பே 
	ஆமா இதோ வந்துட்டேன் இன்னும் நாலு மாசந்தான் இருக்கு, அது வரைக்கும் வெயிட் பண்ணு.
	பூமியின் சுழற்சியைக் கொண்டுதான் நமது கடிகாரம் ஒடுகிறது என்றாலும் அதை கண்காணிக்க அடாமிக் க்ளாக் வைத்திருக்கிறார்கள். சில சமயம்
விண்வெளியில் வினோத நிகழ்வுகளால் மாறுபட்டால் இவை இரண்டும் மாறுபட்டு நிற்கும். அப்போது நம்ம அடாமிக் அண்ணாச்சி முழித்து கொண்டு ஒன்றோ இரண்டோ நிமிடம் தன்னை அட்ஜெஸ்ட செய்து கொள்வார். இது ...</description>
இன்றும் ஒருமுறை
	பார்த்து ரசிக்கிறேன்
படிக்க அலைகிறேன்
பிடித்ததை சேமிக்கிறேன்
	எண்ணங்களை கோர்க்கிறேன்
எழுத விழைகிறேன்
அயர்ந்து விடுகிறேன்
	இன்றும் ஒருமுறை 
கடிகாரம்
	சூரியன் ஆறு மணிக்காம்
குளியல் ஏழாம்
செல்வாய் எட்டு 
	உறங்கியது பதி ஒன்று
உண்டது பத்து
வந்தது ஒன்பது விழித்ததும்
வலைப்பதிக்கிறேன்
எல்லாம் நடக்கிறது
படிப்பதும் பதிவதும் 
	திரட்டினாற் அறநூறு
வளர்ந்திடும் நிதம் நூறு
	தீராமல் காலசுவட்டில்
கணையில் ஆழ்ந்து
	இலக்கின்றி தேடினேன்
வலைப்பதிக்கிறேன்
இருபத்தி இரண்டு
மதிய நேரங்களில் தூங்கியும்
மற்ற நேரங்களில் சாப்பிட்டும்
மாலையில் மெல்ல வீதி வழியே
	சின்னதாய் மாற்றங்கள்
நுணுக்கமாய் 
	தூக்கத்திற்கு மூன்று
சாப்பிட இரண்டு
வலம் வர ஒன்று
இருபத்திரண்டை இரண்டு நாட்களில் நிரப்ப முயல்கிறேன்
உறை வாள்
	முடிவுற்றாலும் மறக்கவில்லை
முறிந்தாலும் மறந்தில்லை
மறைத்து வைக்கிறேன் உன்னோடு உறவாய்
உறைவிலிருக்கும் வாளாய்
நா தொட்டதெல்லாம் தொலங்குது  அப்பு
		<description>	நிஜம்மா அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. நேத்து லாண்டமார்க் போயிருந்தேன். நம்ம தான் இப்ப புத்தகப்புழு ஆகிடோம்ல. கடசியா வாங்க புஸ்தகம் இன்னும் பாதி பக்கம் படிக்காம இருக்க, புழுக்கு பசிக்க ஆரம்பிச்சிருச்சு. புதுசா புஸ்தக வாங்க போன யடத்துல பெரிய அதிர்ச்சி. அதிர்ச்சிக்கு காரணம் , ரண்டு வார முன்ன பிக் பாங்க் வாங்க வந்தப்ப அங்க ஓரே காப்பிதான் இருந்துச்சு. ஆனா நேத்து  வரிச ...</description>
எம்.எஸ்.என் , கூகிள், யாஹூ
		<description>	தேடு பொறி களம் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. மைக்ரோஸாபட் நிறுவனத்தை சேர்ந்த கை பு லீ என்பவர் தேடுபொறிநுட்பத்தில் கைத் தேர்ந்தவர். இவர் அந்நிறுவனத்தை விட்டு கூகிளிடம் சென்றதால் மைக்ரோஸாபட் இவர் மீதும் ,கூகிள் மீதும் வழக்கு தொடுத்துள்ளது.இவர் ஓப்பந்த மிறுதல் செய்தாகவும் , போட்டி நிறுவனத்திற்கு ரகசியங்கள் பரிமாறும் வாய்ப்புள்ளதாக அஞ்சுவதாகவும் , மைக்ரோஸாபட் கவலைப்படுகிறது. 
	ஜ.டி.யைப் பொறுத்த வரை போட்டி நிறுவனங்கள் சிறந்த வேலையாடகளை தங்கள் ...</description>
நியுமதுரை
		<description>	மதுரையைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் அயராத உழைப்பு, உந்ததல் மூலம் தன்னார்வ நிறுவனம் ஓன்றைத் தொடங்கியுள்ளார். அவரின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 
	மதுரையைப் பொறுத்த வரை , எனக்கு பலவிதபட்ட அபிப்ராயங்கள் உண்டு. மருத்தவ கல்லூரி மாணவர் ஓருவர் இப்படி அந்நகரத்தைப் பற்றி கூறுகிறார். “Its a developed village”. இது மதுரை நண்பர்களை காயப்படுத்தாலும் , ஆனால் இது உண்மைக்கு வெகு அருகில் உள்ள கூற்று. ...</description>
பத்தாவது கிரகம்
		<description>	பத்தாவதா ஒரு கிரகம் கண்டுபிடிச்சிருக்காங்க மக்கா. அது கிரக குடும்பத்தில் ஓரு மெம்பர்தானா ? தெரியலா விவாதம் நடந்துகிட்டு இருக்கு. விவாதம் நல்லபடி முடிஞ்சா கண்டிப்பா அனுபல்லவில பதிவு வரும். அதனால புக்மார்க் பண்ணிடுங்க 
	மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்கவும் .
புத்தகங்களின் மடியில் நான்
		<description>	ஆம் மறுபடியும் நான்.  கிளம்பிடாய்ங்கய்யா கிளம்பிடாய்ங்கய்யன்னு குரல வுட்டுகிட்டு ஆரம்பிச்சாசு. கல்லூரி நண்பன் சந்திக்க செல்கையில்  ஹிக்கின்போத்மஸ் வாசம். முதலில் அகப்பட்டது Srilanka:Voices from war zone. அதை தொடர்ந்து Big Bang. ஸமய்ன்சிங் என்னுடைய அபிமான எழுத்தாளர் ஆகி வருகிறார். விலை பற்றி கவலை படாமல் இவரின் புத்தகங்களை படித்து வருகிறேன். 
	Voices from war zone முடிக்க ஓரு வாரம் பிடித்தது. மதிப்புரைக்கு ரஸிதா ...</description>